பிகாரில் 3 மணி நிலவரப்படி 60.40%: கிஷன்கஞ்சில் அதிகபட்ச வாக்குகள்!
பிகார் தேர்தலில் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்...
பிகார் தேர்தலில் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்...
By இணையதளச் செய்திப் பிரிவு
Parvathi
பிகார் சட்டப் பேரவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தலில் 3 மணி நிலவரப்படி 60.40 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
பிகாரில் மொத்தமுள்ள 243 பேரவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவ. 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று(நவ. 11) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்காக 45,399 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இதில் 40,073 வாக்குச்சாவடிகள் ஊரகப் பகுதிகளில் உள்ளன. இந்தத் தேர்தலில் 1,302 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் 1.75 கோடி பெண் வாக்காளர்கள் உள்பட 3.7 கோடி பேர் வாக்களிக்கின்றனர்.
3 மணி நிலவரம்..
பிகார் சட்டப் பேரவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தலில் முன்னதாக பிற்பகல் 1 மணி நிலவரப்படி 47.62 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், 3 மணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளிட்டுள்ளது. அதன்படி 3 மணி வரை 60.40 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக கிஷன்கஞ்ச் 66.1%, பூர்னியா 64.22%, கதிஹார் 63.8% வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதே நேரத்தில் நவாடா 53.17% மற்றும் மதுபனி 55.53% ஆகியவை பின்தங்கியுள்ளன. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் சில மணிநேரங்களில் வெளியாக இருப்பதால், இந்த வாக்குப்பதிவுகள் மாநிலத்தில் யார் ஆட்சியை கைப்பற்ற போகிறார்கள் என்பதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
The Election Commission has reported that 60.40 percent voting has been recorded as of 3 pm in the second phase of Bihar Legislative Assembly elections.
இதையும் படிக்க: தில்லி கார் வெடிப்பு: யார் இந்த உமர் முகமது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது