எவ்வளவு கொள்ளையடித்தாலும் மீண்டும் ஆட்சியில்!! என்டிஏ கூட்டணி மீது ராகுல் கடும் தாக்கு!
ஜனநாயகம், பொதுமக்கள், தலித்துகள் மீது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அக்கறை இல்லை என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ஜனநாயகம், பொதுமக்கள், தலித்துகள் மீது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அக்கறை இல்லை என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு
By இணையதளச் செய்திப் பிரிவு
Sakthivel
மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.300 கோடி நில ஒப்பந்த முறைகேடு தொடர்பான தேசிய ஜனநாயக் கூட்டணியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ``மகாராஷ்டிரத்தில், தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 1800 கோடி மதிப்புள்ள அரசு நிலம், அமைச்சரின் மகனின் நிறுவனத்துக்கு வெறும் ரூ. 300 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, முத்திரைத் தீர்வையும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது, இது ஒரு கொள்ளை மட்டுமல்ல; கொள்ளை தொடர்பான ஒப்புதலுக்கான சட்ட முத்திரைகூட.
வாக்குத் திருட்டால் அமைக்கப்பட்ட அரசின் நிலத் திருட்டாகும் இது. அவர்கள் எவ்வளவு கொள்ளையடித்தாலும், மீண்டும் வாக்குகளைத் திருடி ஆட்சிக்கு வந்து விடுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.ஜனநாயகம், பொதுமக்கள் மற்றும் தலித்துகளின் உரிமைகள் குறித்து எந்த அக்கறையும் அவர்களுக்கு இல்லை.மோடி அவர்களே, உங்கள் மௌனம்தான் நிறைய பேசுகிறது. தலித்துகள் மற்றும் பின்தங்கியவர்களின் உரிமைகளைப் பறிக்கும் கொள்ளையர்களால்தான் உங்கள் அரசு இயங்குவதால்தான், நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க: தேர்தலைத் திருடி பிரதமரானவர் மோடி! ராகுல் காந்தி
No regard for democracy, nor for the public says Rahul Gandhi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது