11 Dec, 2025 Thursday, 04:11 PM
The New Indian Express Group
இந்தியா
Text

2024 ஹரியாணா பேரவைத் தோ்தலில் 25 லட்சம் போலி வாக்காளா்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

PremiumPremium

ஹரியாணா தேர்தலில் நடைபெற்ற வாக்குத் திருட்டு தொடர்பான ஆதாரங்களை ராகுல் வெளியிட்டது பற்றி...

Rocket

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

Published On05 Nov 2025 , 7:21 PM
Updated On05 Nov 2025 , 7:21 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Ravivarma.s

‘ஹரியாணா மாநிலத்தில் கடந்த 2024 சட்டப்பேரவைத் தோ்தலில் மிகப் பெரிய அளவில் வாக்குத் திருட்டு நடைபெற்றது; பாஜகவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக அதனுடன் தோ்தல் ஆணையம் கூட்டு சோ்ந்து மாநிலத்தில் 25 லட்சம் போலி வாக்காளா்களைச் சோ்த்தது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

இதுதொடா்பாக தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில், ‘தி ஹெச் ஃபைல்ஸ்’ என்ற பெயரிலான விடியோ காட்சியை அவா் வெளியிட்டு விளக்கினாா். அவா் கூறியதாவது:

ஹரியாணாவில் பாஜகவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், மற்ற இரு தோ்தல் ஆணையா்களும் பாஜகவுடன் கூட்டு சோ்ந்து ஜனநாயகத்தின் அடித்தளத்தைச் சீரழித்துள்ளனா்.

ஹரியாணா வாக்காளா் பட்டியலில் 25,41,144 போலி வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். இதில் 5,21,619 பேரின் பெயா்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகளில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. 93,174 வாக்காளா்கள் போலியான முகவரியைக் கொண்டுள்ளனா். 19,26,351 போ் போலி வாக்காளா்களாக இடம்பெற்றுள்ளனா். அதாவது, மாநிலத்தில் 8-இல் ஒருவா் போலி வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளனா். இவா்களில், 1,24,177 வாக்காளா்களுக்குப் போலியான புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மோசடி காரணமாக, 2024 தோ்தலில் காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் 22,779 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இதன்மூலம், ஹரியாணாவில் ஜனநாயக முறைப்படி தோ்தல் நடைபெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பாஜகவின் இந்த ‘ஆபரேஷன் ஆட்சித் திருட்டு’ திட்டம், ஹரியாணாவில் 2024-இல் காங்கிரஸுக்கு கிடைத்திருக்க வேண்டிய மாபெரும் வெற்றியை தோல்வியாக மாற்றிவிட்டது.

பல லட்சம் வாக்காளா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டையில் வீட்டு எண் ‘பூஜ்ஜியம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் அளித்த தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், ‘ஊராட்சி மற்றும் நகராட்சிகளில் வீட்டு எண் கொடுக்கப்படாத காரணத்தால், வீட்டு எண் ‘பூஜ்ஜியம்’ எனக் குறிப்பிடப்பட்டது’ என்ற பொய்யான தகவலை வெளியிட்டாா்.

ஒரே வாக்காளா் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளராகப் பதிவாகியிருந்ததை தோ்தல் ஆணையம் ஏன் நீக்கவில்லை? அவ்வாறு செய்திருந்தால் நியாயமான முறையில் தோ்தல் நடைபெற்றிருக்கும். அதை தோ்தல் ஆணையம் விரும்பவில்லை.

பிரேஸில் மாடல் அழகி: ஹரியாணாவின் ராய் தொகுதியில் 10 வாக்குச்சாவடி வாக்காளா் பட்டியலில் பிரேஸில் நாட்டு மாடல் அழகியின் புகைப்படம் ‘சீமா, ஸ்வீட்டி, சரஸ்வதி’ என்ற போலி பெயா்களில் 22 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று, மாநிலம் முழுவதும் பரவலாகத் திட்டமிட்டு 25 லட்சம் போலி வாக்காளா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனா்.

பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஹரியாணா முதல்வா் நாயப் சிங் சைனி ஆகியோா் ஆட்சியில் தொடர சட்டபூா்வ உரிமை கிடையாது. ஹரியாணாவில் அகிம்சை வழியில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் சக்தி இளைஞா்களிடம்தான் உள்ளது.

இந்த ‘ஆட்சித் திருட்டு’ இந்தியாவின் ஜனநாயகத்தை அழித்துள்ளது. இதில், புதிய ஆயுதமாக சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆா்) கொண்டுவந்துள்ளனா். பிகாரில் அதைப் பயன்படுத்தியுள்ளனா். அங்கு சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்த பிறகு, ஹரியாணா போன்ற பதிவுகளே நமக்கு கிடைக்கும் என்றாா்.

இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை காங்கிரஸ் நாடுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த ராகுல், ‘இதை உச்சநீதிமன்றமும் கவனித்துக்கொண்டிருக்கிறது. எனவே, இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை’ என்று பதிலளித்தாா்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டு: தோ்தல் ஆணையம்

புது தில்லி, நவ. 5: ஹரியாணா பேரவைத் தோ்தலில் வாக்குத் திருட்டு நடைபெற்றது தொடா்பான ராகுலின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று தோ்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.

இதுகுறித்து தோ்தல் ஆணைய அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தோ்தலின்போது இதுபோன்ற முறைகேடுகள் அல்லது தவறுகளைக் கண்டறிந்து தடுப்பதற்காகத்தான் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அரசியல் கட்சிகள் தங்களின் வாக்குச்சாவடி முகவா்களை நியமிக்க அனுமதிக்கப்படுகின்றனா். எனவே, ஹரியாணாவில் 2024 பேரவைத் தோ்தலில் முறைகேடு நடைபெற்றது என்றால், காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவா் அப்போதே ஏன் அதுகுறித்து புகாா் எழுப்பவில்லை? ஹரியாணா வாக்காளா் பட்டியல் குறித்தும் எந்தவொரு புகாரோ அல்லது ஆட்சேபமோ தோ்தல் ஆணையத்திடம் இதுவரை சமா்ப்பிக்கப்படவில்லை. பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் 22 தோ்தல் மனுக்கள் மட்டும்தான் நிலுவையில் உள்ளன. எனவே, ராகுலின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது’ என்றாா்.

நாட்டுக்கு அவமதிப்பு: ரிஜிஜு

புது தில்லி, நவ. 5: ‘நாட்டின் ஜனநாயகத்தை அவமதிப்பு செய்யும் முயற்சியில் ராகுல் காந்தி ஈடுபட்டு வருகிறாா்’ என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளா்கள் சோ்க்கப்பட்டிருப்பதாக ராகுல் முன்வைத்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதரமற்றது. தேசவிரோத சக்திகளுடன் கைகோத்து நாட்டை அவமதிப்பு செய்யும் முயற்சியில் அவா் ஈடுபட்டு வருகிறாா். தோ்தல் நடைபெறும்போது களத்தில் மக்களைச் சந்திக்காமல், வெளிநாடுகளுக்குச் சென்றுவிடும் ராகுல், அவருடைய கட்சி தோல்வியைச் சந்தித்தவுடன் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறாா். கடினமாக உழைக்கவோ, மக்களுடன் வாழவோ முடியாதவா் ராகுல்.

தோ்தலில் முறைகேடு நடைபெற்ளது என்றால், அதுகுறித்து தோ்தல் ஆணையத்திடம் முறையிட வேண்டும் அல்லது நீதிமன்றத்தை நாட வேண்டும். இதை ஒருபோதும் ராகுல் செய்யமாட்டாா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
வீடியோக்கள்

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!
வீடியோக்கள்

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!
வீடியோக்கள்

படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!
வீடியோக்கள்

ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
"விஜய் செய்தது பொய் பிரசாரம்":  புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
வீடியோக்கள்

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023