புது தில்லி: மகா கும்பமேளாவை வெற்றியடைச் செய்த பக்தர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, மக்களவையில் தனது உரையைத் தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.
மேலும், மகா கும்பமேளாவின்போது, நாட்டின் பிரம்மாண்டத்தை ஒட்டுமொத்த உலகமும் கண்டு வியந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜன. 13-ஆம் தேதி தொடங்கி, மகா சிவராத்திரி திருநாளான புதன்கிழமை (பிப். 26) வரை மகா கும்பமேளா விழாவானது வெகுவிமா்சையாக நடைபெற்று நிறைவுற்றது.
மகா கும்பமேளாவின் வெற்றி குறித்து மக்களவையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அவர் முதலில், மகா கும்பமேளாவில் பங்கேற்று, அதனை வெற்றியடையச் செய்த பக்தர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு தனது உரையைத் தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், மகா கும்பமேளாவின் முக்கிய விளைவு என்றால் அது ஒற்றுமை என்ற அமிர்தம்தான். நாட்டின் ஒற்றுமையால் கிடைத்த சக்தி, இந்தியாவின் அமைதியைக் குலைக்க நினைத்த அனைத்துச் சக்திகளையும் ஆட்டம்காண வைத்துவிட்டது என்றார்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் சிறப்பு, பிரயாக்ராஜில் அதைத்தான் ஒட்டுமொத்த நாடும் அனுபவித்தது. இதனை விட்டுவிடாமல் தொடர்ந்து வளப்படுத்த வேண்டும்.
இந்தியாவின் புதிய தலைமுறையினருக்கும் மகா கும்பமேளாவுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களும் நமது பாரம்பரியங்களையும் நம்பிக்கையையும் பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். மகா கும்பமேளாவின் வெற்றி நாட்டின் எழுச்சியை வெளிப்படுத்துகிறது. மகா கும்பமேளாவின்போது, நாட்டின் பிரம்மாண்டத்தை ஒட்டுமொத்த உலகமும் கண்டு வியந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகா கும்பமேளாவின் சிறப்பு!
பிரயாக்ராஜ் நகரில் உள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா நடத்தப்பட்டது. எனினும், தற்போதைய வானியல் நிலைகள் காரணமாக 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற நடப்பு கும்பமேளா கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக மாறியிருந்தது. தொடக்க நாள்களில் பிரயாக்ராஜில் நிலவிய கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தா்கள் நீராடினா். நிகழ்வு நடந்த 45 நாள்களில் சாதுக்கள், துறவிகள், பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் என சுமாா் 66 கோடிக்கும் மேற்பட்டவா்கள் சங்கமத்தில் புனித நீராடினா்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாமல் பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷியா, தென்கொரியா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் உள்பட பல்வேறு உலக நாடுகளில் இருந்து ஹிந்து மதத்தைப் பின்பற்றுவோரும், சுற்றுலாப் பயணிகளும் மகா கும்பமேளாவில் பங்கேற்று, இந்தியாவின் பிரமிப்பான கலாசாரத்தைக் கண்டு வியந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

தொகுதி மறுசீரமைப்பில் பாகுபாடு காட்டப்படாது: மக்களவையில் பிரதமா் மோடி உறுதி

நாட்டின் பாதுகாப்பைச் சமரசம் செய்யும் காங்கிரஸ்: பிரதமர் மோடி!

மேற்கு ஆசிய போர்: நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை! பிரதமர் மோடி
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


