ஜம்மு - காஷ்மீரின் வனப்பகுதியில் பதுங்கியுள்ள 3 ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் 3-வது நாளாக இன்று (ஜூன் 28) ஈடுபட்டுள்ளனர்.
உதம்பூர் மாவட்டத்தின் பசந்த்கார் வனப்பகுதியில், பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில், கடந்த ஜூன் 26 ஆம் தேதியன்று, ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் மேலும் 3 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்களை பிடிப்பதற்கான பணிகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய ராணுவத்தினர் மற்றும் மாநில காவல் துறையினர் இணைந்து மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகளில், பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவிகளுடன் இந்த தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த ஓராண்டுக்கும் மேலாகத் தேடப்பட்ட ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகள் 4 பேர் கரோர் நல்லாஹ் பகுதியில் பதுங்கியுள்ளதாக, பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவர்கள் இருக்கும் இடத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தவுடன், இருதரப்புக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியான பயங்கரவாதி, ஹைதர் (எ) ஜப்பார் என்பது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: காமாக்யா கோயிலில் விரைவில் ரோப்கார் வசதி: அஸ்ஸாம் முதல்வர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாகிஸ்தான்: பாதுகாப்புப் படை சோதனையில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரில் சந்தேக நபர்கள் நடமாட்டம்: பாதுகாப்புப் படை தேடுதல் நடவடிக்கை

பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

துலிப் பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்கள் - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


