நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

புரி ஜெகந்நாதர் கோயிலில் "பஹந்தி" சடங்கு தொடக்கம்!

ரத யாத்திரைக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் "பஹந்தி" சடங்கு தொடங்கியது.

News image
பஹந்தி சடங்கு
Updated On :27 ஜூன் 2025, 7:23 am

DIN

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை இன்று(ஜூன் 27) காலை கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெகந்நாதர் கோயிலில் வருடாந்திர ரத யாத்திரை மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்தாண்டுக்கான ரத யாத்திரை இன்று காலை மிகவும் விமரிசையாகத் தொடங்கிய நிலையில், ரத யாத்திரைக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் "பஹந்தி" சடங்கு தொடங்கியது.

பஹந்தி சடங்கு முன்னதாக காலை 9.30 மணிக்குத் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் அது ஒரு மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது, இந்த சடங்கு மூன்று மணி நேரம் நடைபெறும்.

பஹந்தியில் மும்மூர்த்திகளான பாலபத்திரர், தேவி சுபத்ரா மற்றும் ஜெகந்நாதர் ஆகியோர் கோயில் சன்னதியிலிருந்து சுமார் 2.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீ கண்டிச்சா கோயிலுக்குச் செல்வதற்காக சிங்க வாயிலுக்கு முன்னாள் நிறுத்தப்பட்டுள்ள அந்தந்த ரதங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.

மக்களின் கோஷங்கள் மத்தியில், சங்குகளும், மேள தாளங்கள் முழங்க சக்ரராஜ சுதர்னம் முதலில் பிரதான கோயிலிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டது.

ஸ்ரீ சுதர்சனம் என்பது புரியில் ஜெகந்நாதர் வடிவில் வணங்கப்படும் பகவான் விஷ்ணுவின் சக்கர ஆயுதம் ஆகும். ஸ்ரீ சுதர்சனத்தைத் தொடர்ந்து ஜெகந்நாதரின் மூத்த சகோதரர் பாலபத்ரர் சிலை கொண்டுவரப்பட்டது. பாலபத்ரர் "தலத்வஜ" தேரில் அமர்த்தப்பட்டார்.

Story image

ஜெகந்நாதர் மற்றும் பாலபத்ரரின் சகோதரியான சுபத்ரா தேவி "சூன்ய பஹந்தி" என்ற சிறப்பு ஊர்வலத்தில் "தர்பதாலன்" தேருக்கு அழைத்து வரப்பட்டார்.

இறுதியாக ஜெகந்நாதர் கோயிலிலிருந்து வெளியே வந்தபோது, ​​பக்தர்கள் 'ஜெய் ஜெகந்நாதர்' என்று கைகளை உயர்த்தி பலத்த கரகோஷத்துடன் கிராண்ட் ரோடு வழியாகக் கொண்டு வரப்பட்டன.

வழிநெடுகிலும் ஒடிசி நடனக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பல குழுக்கள் வந்திருந்தனர்.

"இறைவன் என்னைப் பார்க்க அருள் செய்தால் என் வாழ்க்கை நிறைவடையும்" என்று ஒடிசி நடனக் கலைஞரான மைத்ரி மகேஸ்வரி கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தின் ஆஷாட சுக்ல திதியின் இரண்டாவது நாளில் ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இது ரத்ன சிங்கசனத்திலிருந்து நகைகளால் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனத்திலிருந்து இறங்கிய பிறகு உடன்பிறந்த தெய்வங்கள் பஹந்தி என்றழைக்கப்படும் விரிவான சடங்கில் பைசி பஹாச்சா என்றழைக்கப்படும் 22 படிகள் வழியாகக் கோயிலிலிருந்து சிலைகளை வெளியே கொண்டுவரும் நிகழ்வாகும்.

பஹந்தி சடங்கிற்கு முன், 'மங்கள ஆரத்தி' மற்றும் 'மைலம்' போன்ற பல வழக்கமான சடங்குகள் நடத்தப்பட்டு, கோயிலின் கருவறையிலிருந்து தெய்வ சிலைகளை வெளியே கொண்டுவருவதற்கு முன்பு நடத்தப்பட்டன.

Story image

மூன்று கம்பீரமான ரதங்களும் கோயிலின் சிங்க துவாரத்தின் முன் கிழக்கு நோக்கி கண்டிச்சா கோயிலை நோக்கி நிமிர்ந்து நிற்கின்றன. பஹந்தியைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி, கஜபதி திப்யசிங்க தேப் பிற்பகல் 3.30 மணிக்கு 'சேரபஹன்ரா' (தேர்களைத் துடைத்தல்) நிகழ்த்துவார், பின்னர் மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி நிரலின்படி தேர் இழுக்கப்படும்.

இதற்கிடையில், ஜெகந்நாதர் மற்றும் அவரது உடன்பிறப்புகளின் வருடாந்திர ரத யாத்திரையைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஏற்கெனவே புனித யாத்திரை நகரமான புரியில் குவிந்துள்ளனர்.

ஒடிசா காவல்துறை, மத்திய ஆயுதக் காவல் படை, என்எஸ்ஜி உள்ளிட்ட சுமார் 10 ஆயிரம் பணியாளர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் திருவிழா நடைபெறுகிறது.

ரத யாத்திரையை சீராக நடத்துவதற்கு அனைத்து சாத்தியமான ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக டிஜிபி ஒய் பி குரானியா செய்தியாளர்களிடம் கூறினார். 275-க்கும் மேற்பட்ட செய்யறிவு(ஏஐ) இயக்கப்படும் சிசிடிவி கேமராக்கள் கூட்டத்தைக் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

The 'Pahandi' ritual in which Lord Balabhadra, Devi Subhadra and Lord Jagannath are being carried in a procession from the 12th-century temple to their respective chariots for the Rath Yatra started on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.