கரோனா தடுப்பூசிக்கும் திடீர் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பூசிகளால் ஏற்படும் பின்விளைவுகள் காரணமாக திடீர் உயிரிழப்புகள் நிகழ்வதாக செய்திகள் பரவிய நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை ஆய்வு நடத்தியுள்ளது.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில், கரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகள் மூலம் திடீர் உயிரிழப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில், கரோனா தடுப்பூசிகளுக்கும் திடீர் உயிரிழப்புகளுக்கு தொடர்பு இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றின் ஆய்வில், இந்தியாவில் கரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்பதையும், மிகவும் அரிதான நிகழ்வுகளில் மட்டுமே கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதையும் உறுதிப்படுத்துகின்றன.
திடீர் மாரடைப்புகளுக்கு பல காரணங்கள் உள்ளன. வாழ்க்கை முறை, பிற நோய்கள் மற்றும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டதற்கு பிறகு ஏற்பட்ட பின்விளைவுகள்கூட இருக்கலாம்.
குறிப்பாக 18 வயது முதல் 45 வயதுக்குள்பட்டவர்களின் திடீர் மரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. கடந்த கால தரவுகளின் அடிப்படையில் மற்றும் நிகழ்கால மரணங்களை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
"இந்தியாவில் 18 - 45 வயதுடையவர்களின் திடீர் மரணங்களுக்கான காரணங்கள்” என்ற தலைப்பில் ஐசிஎம்ஆரின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வு மே 2023 முதல் ஆகஸ்ட் 2023 வரை 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 47 மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டது. அக்டோபர் 2021 முதல் மார்ச் 2023 வரை நலமுடன் இருந்த நிலையில், திடீரென்று உயிரிழந்தவர்களை மையமாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதன் முடிவில், கரோனா தடுப்பூசிகள் திடீர் மரணங்கள் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், தில்லி எய்ம்ஸ் மற்றும் ஐசிஎம்ஆர் இணைந்து இளைஞர்களின் திடீர் மரணங்களுக்கான காரணத்தை கண்டறிய மற்றொரு ஆய்வு நடத்தப்பட்டது. அதிகளவிலான மரணங்கள் மாரடைப்பால் ஏற்பட்டதாகவும், முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லை எனவும் தெரியவந்துள்ளது. திடீர் மரணங்களுக்கு மரபணு மாற்றங்கள் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு ஆய்வுகளின் முடிவில், இந்தியாவில் இளைஞர்களிடையே ஏற்படும் திடீர் மரணங்களுக்கு தடுப்பூசி காரணம் இல்லை எனத் தெரியவருகிறது. மரபணு மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறையே திடீர் மரணங்களில் அதிக பங்கு வகிக்கிறது.
கரோனா தடுப்பூசிக்கும் திடீர் மரணங்களுக்கும் தொடர்பில்லை என்பது அறிவியல்பூர்வமாக நிபுணர்கள் மீண்டும் வலியுறுத்துகின்றனர். ஆதாரம் இல்லாத ஊகங்கள், கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்றும் தடுப்பூசி மீதான மக்களின் நம்பிக்கையை குறைக்கும் அபாயம் உள்ளது. இது பொது சுகாதாரத்தை மோசமாக பாதிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : பஹல்காம் தாக்குதலுக்கு க்வாட் தலைவர்கள் கண்டனம்!
Summary
The matter of sudden unexplained deaths has been investigated through several agencies in the country. These studies have conclusively established that there is no direct link between COVID 19 vaccination and the reports of sudden deaths in the country.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடுகள் புதுச்சேரி தோ்தல் அதிகாரி ஆய்வு

இந்தியப் பொருளாதார வளா்ச்சி 6.9 சதவீதமாக உயரும்: ஆசிய வளா்ச்சி வங்கி கணிப்பு

காவல் நிலையங்களில் சிசிடிவி: 2 வாரங்களில் பிரச்னைகள் தீா்க்கப்படும்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: எஃப்சிஆர்ஏ திருத்த மசோதா நிறுத்திவைப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


