இந்தியாவில் முதலீடு செய்ய ஜோர்டான் நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு!
இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஜோர்டான் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளது குறித்து..
இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஜோர்டான் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளது குறித்து..
By இணையதளச் செய்திப் பிரிவு
Ahmed Thaha
ஜோர்டான் நாட்டின் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக, ஜோர்டான் நாட்டுக்கு நேற்று (டிச. 15) சென்றடைந்தார். ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் அழைப்பை ஏற்று இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா - ஜோர்டான் தொழில்முணைவோர் கூட்டத்தில் இன்று பங்கேற்ற பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய ஜோர்டானின் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:
“இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக உருவாகப்போகின்றது. எனவே, இந்த வளர்ச்சியில் ஜோர்டான் நிறுவனங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.
இந்தியா மற்றும் ஜோர்டான் இடையிலான உறவு வரலாற்று ரீதியான நம்பிக்கை மற்றும் எதிர்கால பொருளாதார வாய்ப்புகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவானது. ஜோர்டானில் உள்ள இந்திய நிறுவனங்களால் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்க முடியும்.
இதன்மூலம், ஜோர்டான் மக்கள் பயன்பெறுவார்கள். மேலும், மேற்கு ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு நம்பகமான மையமாக ஜோர்டான் உருவாக முடியும்” எனக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஜோர்டானில் தனது பயணத்தை முடித்து கொண்டு, எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!
Prime Minister Narendra Modi has invited companies from Jordan to invest in India.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது