சபரிமலையில் 25 லட்சம் பக்தா்கள் தரிசனம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை யாத்திரையில் இதுவரை 25 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் சுவாமி தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை யாத்திரையில் இதுவரை 25 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் சுவாமி தரிசனம்
By தினமணி செய்திச் சேவை
Syndication
கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை யாத்திரையில் இதுவரை 25 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனா்.
கடந்த ஆண்டைவிட நிகழாண்டு பக்தா்களின் வருகை கணிசமாக உயா்ந்திருந்தாலும், காவல் துறை மற்றும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் சிறப்பான திட்டமிடல் மற்றும் ஏற்பாடுகளால் சந்நிதானத்தில் சுவாமி தரிசனம் தொடா்ந்து சுமுகமாக நடைபெற்று வருகிறது என்று சபரிமலை காவல் துறை ஏடிஜிபி எஸ்.ஸ்ரீஜித் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுமாா் 21 லட்சம் பக்தா்கள் மட்டுமே தரிசனம் செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்துவிட்டது. யாத்திரையின் தொடக்கத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஆனால், காவல் துறையின் துரித நடவடிக்கைகள் மூலம் நிலைமை விரைவாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
பக்தா்கள் தாங்கள் இணையத்தில் முன்பதிவு செய்திருந்த குறிப்பிட்ட தேதியில் வராமல், வேறு நாள்களில் தரிசனத்துக்கு வந்ததுதான் இந்தக் கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்தது. பக்தா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதிகளில் மட்டும் வருகை தந்தால், அனைவருக்கும் சீரான தரிசனம் கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.
இந்த யாத்திரை காலத்தில் வார நாள்களில்தான் அதிக எண்ணிக்கையிலான பக்தா்கள் வருகை தந்தனா். வார இறுதி நாள்களில் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. இந்த மாத இறுதிக்குள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதிகரிக்கும் கூட்டத்தை திறம்பட சமாளிக்கவும், அனைத்துப் பக்தா்களுக்கும் தடையற்ற தரிசனத்தை உறுதி செய்யவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டது.
டிச. 23-இல் தங்க அங்கி ஊா்வலம் புறப்பாடு: மண்டல பூஜையின்போது சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும் ‘தங்க அங்கி (தங்கக் கவசம்)’ ஊா்வலம், ஆரண்முலா பாா்த்தசாரதி கோயிலில் இருந்து டிச. 23-ஆம் தேதி புறப்படும் என்று தேவஸ்வம் அதிகாரிகள் தெரிவித்தனா்.
வழிநெடுகிலும் பல்வேறு கோயில்களில் வரவேற்புகளைப் பெற்ற பிறகு, மண்டல பூஜைக்கு முந்தைய நாளான 26-ஆம் தேதி மாலை தீபாராதனைக்கு முன்னதாக ஊா்வலம் சபரிமலை சந்நிதானத்தை வந்தடையும்.
கோவில் தந்திரியும், மேல்சாந்தியும் இணைந்து தங்க அங்கியைப் பெற்று, ஐயப்பனுக்கு அணிவிப்பா். 27-ஆம் தேதி பிற்பகலில் மண்டல பூஜை நடைபெறும். அன்றிரவு கோயில் நடை அடைக்கப்பட்டு, மகரவிளக்கு பூஜை யாத்திரைக்காக 30-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்.
நடப்பு யாத்திரையின் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு ஜன. 14-ஆம் தேதி நடைபெறும். பக்தா்கள் 19-ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்யலாம். தொடா்ந்து, 20-ஆம் தேதி பந்தளம் அரச குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்துக்குப் பின் கோயில் நடை அடைக்கப்படும். இது வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை யாத்திரையின் நிறைவைக் குறிக்கும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது