சால்ட் லேக் திடல் வன்முறை: டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்படும்!
கொல்கத்தா திடலில் நடந்த மோதல் பற்றி மேற்கு வங்க டிஎஸ்பி பேசியதாவது...
கொல்கத்தா திடலில் நடந்த மோதல் பற்றி மேற்கு வங்க டிஎஸ்பி பேசியதாவது...
By இணையதளச் செய்திப் பிரிவு
Dineshkumar
கொல்கத்தாவில் மெஸ்ஸி பங்கேற்ற சால்ட் லேக் திடலில் வன்முறை கட்டுக்கொள் கொண்டுவரப்பட்டதாக டிஎஸ்பி பேட்டி அளித்துள்ளார்.
லியோனல் மெஸ்ஸி பாதியிலேயே திடலை விட்டு வெளியேறியதால் அவரது ரசிகர்கள் திடலை அடித்து நொறுக்கினார்கள்.
’கோட் டூர் ஆஃப் இந்தியா 2025’ என்ற பயணத்தின்படி மெஸ்ஸி இன்று அதிகாலை லியோ மெஸ்ஸி கொல்கத்தா வந்தார்.
இன்று அதிகாலை கொல்கத்தா வந்த லியோனல் மெஸ்ஸி முதலில் தனது 70 அடி உயர சிலையை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
பின்னர், சால்ட் லேக் திடலுக்கு வந்தார். அங்கு கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அடுத்ததாக மோகன் பகான் அணியின் மெஸ்ஸி ஆல் ஸ்டார் அணியும் டையமண்ட் ஆர்பர் ஆல் ஸ்டார் அணியும் விளையாட இருந்தது.
மெஸ்ஸி சால்ட் லேக் திடலை விட்டு சென்றதால், ரசிகர்கள் நாற்காலிகளை தூக்கி வீசத் தொடங்கினார்கள். இதனால் சால்ட் லேக் திடலே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
இதனை அடுத்து இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர். மெஸ்ஸி டதங்கியிருக்கும் விடுதிக்கு அருகிலும் கூட்டம் கூடியதால் தடியடி நடத்தப்பட்டது.
பணம் திருப்பி அளிக்கப்படும்
டிக்கெட் மோசடி நடந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இது குறித்து மேற்கு வங்கத்தின் டிஎஸ்பி ராஜீவ் குமார் பேசியதாவது:
மெஸ்ஸி விளையாடாமல் சென்றதால் ரசிகர்களிடம் பதற்றம் அல்லது கோபம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மெஸ்ஸி இங்கு வந்து, ரசிகர்களைப் பார்த்து கை அசைத்துவிட்டு, சிலரைச் சந்தித்துவிட்டு செல்வதுதான் திட்டம். இதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எதாவது தவறு செய்துள்ளார்களாக என்பது குறித்து விசாரிக்க ஓர் ஆணையம் அமைக்கப்பட்டும்.
பணம் திருப்பி அளிக்கப்படுமென விழா ஏற்பாட்டாளர்கள் எழுதிக் கொடுத்துள்ளார். சூழ்நிலை கட்டுக்குள் இருக்கிறது. ஏற்கெனவே, விழா ஏற்பாட்டாளர்களை காவலில் வைத்துள்ளோம் என்றார்.
The DSP has given an interview stating that the violence at the Salt Lake Stadium, where Messi participated, has been brought under control in Kolkata.
போர்க்களமான சால்ட் லேக் திடல்..! ஊழல் நடந்ததாக மெஸ்ஸி ரசிகர்கள் போராட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது