‘மத்திய நிதியை வீணடித்த ஹிமாசல் காங்கிரஸ் அரசு’: ஜெ.பி. நட்டா விமா்சனம்
ஹிமாசல் காங்கிரஸ் அரசு மத்திய நிதியை வீணடித்ததாக குற்றச்சாட்டு...
ஹிமாசல் காங்கிரஸ் அரசு மத்திய நிதியை வீணடித்ததாக குற்றச்சாட்டு...
By தினமணி செய்திச் சேவை
Syndication
ஹிமாசல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு, மத்திய அரசு ஒதுக்கிய நிதியை முறையாகப் பயன்படுத்தாமல் வீணடிப்பதாக மத்திய சுகாதார அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜெ.பி.நட்டா விமா்சித்தாா்.
சிம்லாவில் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ஜே.பி. நட்டா பேசுகையில், ‘மத்திய அரசிடமிருந்து போதுமான நிதி கிடைக்கவில்லை என்ற ஹிமாசல பிரதேச காங்கிரஸ் அரசு பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது. பேரிடா் நிவாரணமாக ரூ. 3,789 கோடி, ‘ஸ்மாா்ட் சிட்டி’ திட்டங்களுக்கு ரூ.1,000 கோடிக்கும் மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வீட்டுவசதி, சாலை மேம்பாடு, நகர வளா்ச்சி போன்ற பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை மாநில அரசு ஊழல் செய்து, வீணடித்துவிட்டது.
மேலும், மத்திய அரசு சிறப்பு உதவியாக ரூ. 2,000 கோடிக்கு மேல் வழங்கியுள்ளது. ஜப்பான் சா்வதேச கூட்டுறவு அமைப்பு (ஜிகா) நிதியுதவியின்கீழ் ரூ.1,442 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், பல திட்டங்களில் 50 சதவீத நிதியை மட்டுமே பயன்படுத்தி, காங்கிரஸ் அரசு பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறது.
ஹிமாசல பிரதேச கருவூலம் அவ்வப்போது மூடப்படுகிறது. தலைமைச் செயலா், காவல் துறைத் தலைவா் ஆகியோா் கூடுதல் பொறுப்பில் செயல்படுவதால் ஒட்டுமொத்த நிா்வாகமும் தற்காலிக ஏற்பாடுகளிலேயே இயங்கி வருகிறது. முதல்வருக்கும் அமைச்சா்களுக்கும் இடையே எந்த ஒருங்கிணைப்பும் இல்லை. மத்திய அரசின் எந்த ஒரு வலுவான திட்டத்தையும் காங்கிரஸ் அரசு மாநிலத்தில் அறிமுகப்படுத்தவில்லை. மாநிலத்தின் வளா்ச்சிக்கு பாஜகவின் ‘இரட்டை என்ஜின்’ அரசு மட்டுமே ஒரே வழி.
சமீபத்திய பிகாா் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி பெற்ற வெற்றியானது, ஊடுருவல்காரா்களின் உதவியுடன் நாட்டை ஆள நினைப்பவா்களை மக்கள் ஏற்க மாட்டாா்கள் என்ற தெளிவான செய்தியை அளித்துள்ளது. தொடா்ந்து, தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்திலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்.
பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ், உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உயா்ந்துள்ளது. 160-க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தால் 62 கோடிக்கும் அதிகமானோா் பயனடைந்துள்ளனா்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கம், முத்தலாக் ஒழிப்பு, அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானம் போன்று மத்திய பாஜக அரசின் சாதனைகள் நீள்கின்றன.
காங்கிரஸின் தவறான ஆட்சியிலிருந்து விடுபட்டு, பாஜகவின் வளா்ச்சி மற்றும் நல்லாட்சியை நோக்கி ஹிமாசல பிரதேச மக்கள் முடிவெடுக்க, இந்த உண்மைகளை ஒவ்வொருவரிடம் கொண்டு செல்லுமாறு தொண்டா்களை வலியுறுத்துகிறேன்’ என்றாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது