16 Dec, 2025 Tuesday, 03:28 AM
The New Indian Express Group
இந்தியா
Text

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கிய 100 வயது பெண் மருத்துவர்! குடியரசுத் தலைவர் பாராட்டு!

PremiumPremium

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கிய 100 வயது மருத்துவரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டியுள்ளார்...

Rocket

புவனேசுவரத்தின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கிய பெண் மருத்துவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு

Published On05 Dec 2025 , 2:48 PM
Updated On05 Dec 2025 , 2:54 PM

Listen to this article

-0:00

By இணையதளச் செய்திப் பிரிவு

Ahmed Thaha

ஒடிசாவின் புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.3.4 கோடியை நன்கொடையாக வழங்கிய 100 வயதான மருத்துவர் கே. லக்‌ஷ்மி பாயை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டியுள்ளார்.

ஒடிசாவின் பெர்ஹம்பூரைச் சேர்ந்த பெண் மருத்துவர் கே. லக்‌ஷ்மி பாய். இவர் தனது 100 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வாழ்நாள் சேமிப்பான ரூ.3.4 கோடி முழுவதையும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளிக்க புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நன்கொடை வழங்கிய மருத்துவர் லக்‌ஷ்மிக்கு புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், மருத்துவர் லக்‌ஷ்மி பாயிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் இன்று (டிச. 5) பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, குடியரசுத் தலைவர் முர்மு வெளியிட்டுள்ள செய்தியில்:

“பெண்களின் முன்னேற்றத்திற்கு இது ஒரு மிக முக்கியமான படியாகும். உங்கள் சிந்தனைமிக்க செயலை நான் மிகவும் பாராட்டுகிறேன். அனைவருக்கும் சுகாதார சேவையை வழங்க அரசுகள் செயல்பட்டு வருகின்றன. உங்களைப் போன்ற தாராள மனப்பான்மை கொண்ட குடிமக்களின் பங்கேற்பு அரசின் முயற்சிகளை ஆதரிக்க மற்றவர்களையும் ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்.

கல்வி ஒரு தனிநபருக்கு எப்படி பயனளிக்கும் என்பதற்கு உங்களது வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, கட்டாக் மாவட்டத்தில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரியில் கடந்த 1950 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மருத்துவர் கே. லக்‌ஷ்மி பாய், அமெரிக்காவில் பெண்கள் நலன் குறித்த பல்வேறு மருத்துவப் படிப்புகளையும் பயின்றுள்ளார்.

மேலும், ஒடிசாவில் லேப்ராஸ்கோபிக் அறுவைச் சிகிச்சை முறையை கற்றுக்கொண்ட முதல் பெண் மருத்துவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: புதினுக்கு பகவத் கீதை அன்பளிப்பு! பிரதமர் மோடி சநாதன தர்மத்தின் தூதர்: கங்கனா ரணாவத் பேச்சு!

President Draupadi Murmu has praised 100-year-old doctor K. Lakshmi Bhai, who donated her life savings of Rs 3.4 crore for research at AIIMS in Bhubaneswar, Odisha.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023