பிரதமர் மோடி மீது வெறுப்பு இல்லை; ஆனால் நாட்டை நேசிக்கிறோம்: காங்கிரஸ்
பிரதமர் மோடி மீது காங்கிரஸ் கட்சிக்கு வெறுப்பு இல்லை; ஆனால் நாட்டை நேசிக்கிறோம் என்று கட்சி சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.


புது தில்லி: பிரதமர் மோடி மீது வெறுப்பு இல்லை, ஆனால் நாட்டை நேசிக்கிறோம் என, பிரதமர் மோடி குறித்து கட்சித் தலைவர் கார்கே பேசிய கருத்துக்கு விளக்கம் கொடுக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை தாக்கிப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரசாரத்தின் கடைசி நாளில் தனது உரையின் மூலம், கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சியின் வெறுக்கத்தக்க, அவமானகரமான பேச்சுகளில், காங்கிரஸ் தலைவர் விஞ்சிவிட்டார் என்று கூறியிருந்ததைத் தொடர்ந்து பவன் கேரா பதிலளித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியது குறித்து அமித் ஷா பதிலளித்த நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, 'நாட்டில் 67 சதவீத மக்கள் ஆதரவாக வாக்களிக்காததால், நரேந்திர மோடியிடமிருந்து நாடு விடுதலை பெற வேண்டும் என்றுதான் காங்கிரஸ் விரும்புவதாகக் கூறினார்.
மேலும், காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் மீது வெறுப்பு இல்லை, மாறாக, நாட்டின் மீது காதல் உள்ளது என்பதை எப்போது பாஜக புரிந்துகொள்ளப் போகிறது. அதனால்தான், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது சித்தாந்தங்களிலிருந்து இந்த நாடு விடுதலை பெற வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்.
ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் மூன்றாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஆட்சி அதிகாரத்தில் இருந்து பிரதமர் மோடியை அகற்றும் வரை என் உயிர் போகாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியிருந்தார். இதுதான் இன்று பாஜக - காங்கிரஸ் இடையேயான விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை, ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென மயங்கிய கார்கே, பின்னர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசினார்.
அப்போது, எனக்கு 83 வயதாகிறது. நான் அவ்வளவு சீக்கிரம் இறந்துவிட மாட்டேன். ஆட்சி அதிகாரத்தில் இருந்து பிரதமர் மோடியை அகற்றும் வரை என் உயிர் போகாது. மக்களுக்கான என் போராட்டம் தொடரும் என்று கூறியிருந்தார் கார்கே.
இதற்கு அமித் ஷா கண்டனம் தெரிவித்து இன்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். கார்கேவின் பேச்சு அருவருப்பான மற்றும் அவமானகரமானது என்று விமர்சித்திருக்கும் மத்திய அமைச்சர் அமித் ஷா, தனது தனிப்பட்ட உடல்நிலை விவகாரத்தில் பிரதமர் மோடியை இழுப்பது தேவையற்றது என்று தெரிவித்திருந்தார்.
வெறுப்பின் மீதான கசப்பான வார்த்தைகளை கொட்டியிருக்கிறார், காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடி மீது கொண்டிருக்கும் அச்ச உணர்வையும், அவர்கள் எப்போதும் பிரதமர் மோடியை பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதையுமே இது காட்டுகிறது என்றும் அமித் ஷா தெரிவித்திருந்தார்.
கார்கேவின் உடல்நிலை சரியாக வேண்டும் என மோடி பிரார்த்தனை செய்கிறார், நானும் அனைவருமே பிரார்த்தனை செய்வோம், அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று, 2047ஆம் ஆண்டு இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்கப்படுவதைக் காண்பதற்காக, கார்கே வாழ வேண்டும் என்று கூறியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...