பிகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் யூடியூப் விடியோக்களின் உதவியுடன் பித்தப்பைக் கல் அகற்றம் செய்யும் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
பிகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் அஜித் குமார் என்பவர் யூடியூப் விடியோக்களைப் பார்த்து பித்தப்பை கல் அகற்றம் செய்யும் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து சரண் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) குமார் ஆஷிஷ் கூறுகையில்,
இறந்தவர் சரண் மாவட்டத்தின் பூவல்பூர் கிராமத்தைச் சேர்ந்த கோலு என்கிற கிருஷ்ண குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குடும்ப உறுப்பினர்களின் தகவலின்படி, கோலு சில நாள்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், அவரது குடும்பத்தினர் சரணில் உள்ள தர்மபாகி பஜாரில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
கோலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, யூடியூப்பில் விடியோக்களைப் பார்த்து பித்தப்பை அகற்றும் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, கோலுவின் நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவரை பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர் செப்டம்பர் 7 அன்று உயிரிழந்தார். யூடியூப்பில் விடியோக்களைப் பார்த்து அறுவைச் சிகிச்சை செய்ததாக குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இறந்தவரின் தாத்தா, யூடியூப்பில் விடியோவைப் பார்த்து என் பேரனுக்கு அறுவைச் சிகிச்சை செய்வதை நான் நேரில் பார்த்தேன். பித்தப்பை கல் அகற்றும் அறுவைச் சிகிச்சை செய்வதாக அவர் எங்களிடம் தெரிவிக்கவும் இல்லை, அனுமதியும் பெறவில்லை.
கோலுவின் உடல்நிலை மோசமானதையடுத்து அவர் பாட்னாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே கோலு உயிரிழந்தான் என்று அவர் கூறினார்.
இதுதொடர்பாக குடும்பத்தினர் செப். 7ல் அளித்த புகாரின்பேரில் அஜித் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மேலும் அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யூடியூப் மூலம் தவறான அறுவைச் சிகிச்சை செய்ததால் சிறுவனின் உயிர் பறிபோன சம்பவம் அப்பகுதியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அறுவைச் சிகிச்சை

கதாநாயகனான விக்கல்ஸ் விக்ரம்!

அறுவைச் சிகிச்சையின்றி இருதய வால்வு மாற்றம்

2,020 நாய்களுக்குத் தடுப்பூசி: புதுகை மாநகராட்சிக் கூட்டத்தில் தகவல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை




