ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார் வைபவ் குமார்!

மூன்று மாதங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார் வைபவ் குமார்.

News image

பிபவ் குமார்

Updated On :3 செப்டம்பர் 2024, 10:56 am

ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினா் ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உதவியாளா் வைபவ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து திகார் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக சிறையிலிருந்த வைபவ் குமார், சிறை எண் ஐந்தில் இருந்து மதியம் 2 மணிக்கு விடுவிக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 100 நாள்களுக்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டுள்ளதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு, அரசுத் தரப்பு 51-க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரிக்க முன்வந்துள்ளதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, விசாரணை முடிவடைய காலமாகும் என்று கூறியது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், குமாரை விடுவிப்பதால் விசாரணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் நீதிபதிகள் அமா்வு கூறியது.

கடந்த மே 13 அன்று கேஜரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் குமார் மாலிவாலை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த மே 18ல் தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.