தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தீபாவளிக்கு 7,000 சிறப்பு ரயில்கள்!

தீபாவளி மற்றும் சத் பூஜையையொட்டி நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு.

News image
அஸ்வினி வைஷ்ணவ்
Updated On :24 அக்டோபர் 2024, 12:02 pm

DIN

தீபாவளி மற்றும் சத் பூஜையையொட்டி நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

வேலைக்காக நகரங்களில் இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் வகையில் பண்டிகை காலங்களில் ரயில்வே துறை சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

கடந்த ஆண்டு தீபாவளி மற்றும் சத் பூஜைக்காக 4,500 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு 7,000 ரயில்கள் இயக்கப்படும் என்று இன்று செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இதன் மூலமாக தினமும் கூடுதலாக 2 லட்சம் பயணிகள் ரயில்களில் பயணம் மேற்கொள்வார்கள் என்றும், ரயில்களில் நெரிசலைக் குறைக்கவும் மக்கள் எளிதாக ஊருக்குச் செல்லவும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் சில ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

வடக்கு ரயில்வே இந்தாண்டு 3,050 நடைகள் சிறப்பு ரயில்களை இயக்கியதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதன் எண்ணிக்கை 1,082 ஆக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.