தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தலிலும் பாஜக வெற்றிபெறும்: நட்டா!

நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக வெற்றிபெறும்..

News image

ஸ்ரீ நைனா தேவி கோயிலில் நட்டா

Updated On :11 அக்டோபர் 2024, 7:53 am

பிலாஸ்பூர்: ஹரியாணாவைத் தொடர்ந்து, வரவிருக்கும் தேர்தலிலும் பாஜக வெற்றிபெறும் என பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உறுதிப்படத் தெரிவித்தார்.

ஸ்ரீ நைனா தேவி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நட்டா, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் செயல்பாடுகளால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெறும்.

ஹரியாணா, ஜம்மு-காஷ்மீரில் பாஜக நிறைய சாதித்துள்ளதாகவும், இதற்கான பெருமை அனைத்தும் மக்களையே சேரும். தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து நைனா கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.

ஹரியாணாவில் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் மறுபிரவேச முயற்சியைத் தடுத்து நிறுத்தவும் ஆளும் பாஜக ஹரியாணாவில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 இடங்களில் 29 இடங்களைக் கைப்பற்றி பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. யூனியன் பிரதேசத்தில் தேசிய மாநாடு-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.