புது தில்லியில் நேற்று ஜூன் 5-ல் நடைபெற்ற மூன்று நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி ஒரே உடையில் இருந்தார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தலைநகரமே பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது. ஒருபக்கம் பாஜக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம், மறுபக்கம் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டம்.

ஆட்சியமைப்பது, மத்திய அமைச்சர்கள் என பல்வேறு விஷயங்களை மோடி தலைமையிலான பாஜக கூட்டணித் தலைவர்கள் ஆலோசிக்க, எதிர்க்கட்சித் தலைவர் யார், அடுத்த செய்ய வேண்டியது என என்பதை இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஆலோசித்தனர்.

-
தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள் என்பதால் நேற்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுமே பரபரப்பாகக் காணப்பட்டார்கள்.
இதனிடையே, நேற்று பிரதமர் நரேந்திர மோடி மூன்று நிகழ்ச்சிகளில் ஒரே உடையில் இருந்தது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளதுடன் சமூக ஊடகங்களில் விறுவிறுப்பாகப் பரவியது.

ANI
சுற்றுச்சூழல் நாள் என்பதால், புது தில்லியில் நேற்று காலையில் நடந்த சுற்றுச்சூழல் நிகழ்ச்சியில் பங்கேற்று மரக்கன்று நட்டார் பிரதமர் மோடி.
பிறகு கூட்டணித் தலைவர்கள் கூட்டம், அதை முடித்துக்கொண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தது என அனைத்தும் ஒரே உடையில் இருந்தார் பிரதமர் மோடி.
ஆட்சிப் பொறுப்பேற்ற பின் பல ஆண்டுகளாக ஒரே நாள் என்றாலும்கூட ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வெவ்வேறு விதமான உடைகளைத்தான் பிரதமர் மோடி அணிந்துவருவார். நீண்ட காலத்துக்குப் பிறகு தற்போது ஒரே உடையில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தோனேசியாவில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

மக்களைக் கடவுளாகவும், ஜனநாயகத்தை கோயிலாகவும் கருதி பணியாற்றும் பிரதமர்: தில்லி முதல்வர்

தில்லியில் போட்டியிட்டிருந்தால் 10 லட்சம் வாக்குகள்..! - இந்திய பயணத்தை நினைவுகூர்ந்த இத்தாலி பிரதமர்!
தில்லியில் பலத்த காற்றுடன் மழை! மூன்று விமானங்கள் சேதம்!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




