உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில், நாட்டையே உலுக்கிய கூட்ட நெரிசல் உயிரிழப்பில், தனது சகோதரனின் மனைவியை இழந்துவிட்டு, அவர்களது 5 வயதுக் குழந்தையைத் தேடிக்கொண்டிருக்கும் ராஜ்குமாரி தேவி, இதுபோன்ற விதியை ஏழைகள்தான் சந்திப்பார்கள், பணக்காரர்கள் அல்ல என்று கூறி கதறுகிறார்.
ஆம்புலன்ஸில், தனது சகோதரனின் மனைவி ரூபியின் உடலை வைத்துக்கொண்டு, அவரது 5 வயது குழந்தை எங்கிருக்கிறார் என்று தெரியாமல், ஒட்டுமொத்த குடும்பமும் அங்குமிங்கும் தேடி அலைந்துகொண்டிருப்பதைப் பார்த்து கதறி அழுதுகொண்டிருக்கிறார்.
தனது கணவருடன் உன்னாவ் மாவட்டத்திலிருந்து, ஆன்மிக சொற்பொழிவுக்கு வந்தவர் ராஜ்குமாரி. இவர் தனது சகோதரன், அவரது மனைவி மற்றும் 5 வயது குழந்தையுடன் சொற்பொழிவில் கலந்துகொண்டிருந்தார். ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது, ரூபி பலியான நிலையில், 5 வயது குழந்தை எங்கிருக்கிறான் என்று தெரியாமல் தேடிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார் ராஜ்குமாரி.
தங்களது வீட்டிலிருந்து 400 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் தற்போது ஹாத்ரஸ் புறப்பட்டு வந்துகொண்டிருக்கிறார்கள்.
அரசுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, இப்போது என்ன சொல்வது? எதையும் சொல்வதற்கில்லை. எங்களைப் போன்ற ஏழைகள் மட்டுமே இதுபோன்றதொரு விதியைச் சந்திக்கிறார்கள். பணக்காரர்கள் இல்லை என்று கூறி கதறுகிறார்.
ராஜகுமாரி மற்றும் சகோதரன் குடும்பம் உள்பட 60 பேர் இந்த பாபாவின் சத்சங்கத்தில் பங்கேற்க வந்துள்ளார்கள். இரண்டு பேருந்துகளில் பல ஊர்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து புறப்பட்டு வந்துள்ளனர்.
தனது மகளின் உடலுக்கு அருகே அமர்ந்து அழுதுகொண்டிருக்கும் சேத்தி லால் என்ற முதியவர், கட்டிக்கொடுத்த மகளையும் என்னுடன் அழைத்து வந்தேன். இன்று எனது மகள் சடலமாகிவிட்டார், அவரது கணவருக்கு என்ன சொல்வேன் என்று தெரியாமல் கலங்கி நிற்பதாகக் கூறுகிறார்.
இவ்வளவு கூட்டம் சேரும் என்று ஏற்பாட்டாளர்களும் எதிர்பார்க்கவில்லை, கூட்டத்துக்கு வந்திருந்தவர்களும் எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நொய்டாவில் மாணவா் நீரில் மூழ்கி பலி: விசாரணை நடத்த தாய் கோரிக்கை!

20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 12,000 திரைப் பாடல்களைப் பாடிய ஆஷா போஸ்லே!

போலீஸில் புகார் அளித்த மனைவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டுக் கொன்ற கணவன் கைது!

சீமாபுரியில் வயதான தாய் கொலை: மகன் கைது
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


