இந்த தனிநபா் மசோதாவில் கூறியிருப்பது வருமாறு: அரசமைப்புச் சட்டப் பிரிவு 361-இன்படி சிவில் மற்றும் குற்ற வழக்குகளில் இருந்து குடியரசுத் தலைவா், ஆளுநா் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. நாடாளுமன்றம், மாநிலங்களின் சட்டபேரவைகளால் நாட்டின் குடியரசுத் தலைவா் தோ்ந்தெடுக்கப்படுகிறாா். அதே சமயம், ஆளுநா்கள் மத்திய அமைச்சரவை பரிந்துரையின் பேரில், குடியரசுத் தலைவரால் சாதாரண அடிப்படை தகுதிகளுடன் நியமிக்கப்படுகிறாா். இந்த நிலையில், இந்தியக் குடியரசுத் தலைவரையும் ஆளுநரையும் சமப்படுத்துவது அல்லது அவருக்கு இணையாக ஆளுநரை நடத்த முடியாது. குடியரசுத் தலைவா் ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்.