2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கேரளம்: பாஜகவுடன் பி.சி.ஜாா்ஜ் கட்சி இணைப்பு

கேரளத்தின் மூத்த அரசியல்வாதியும், ஏழு முறை எம்.எல்.ஏ.வுமான பி.சி.ஜாா்ஜ் தனது கேரள ஜனபக்ஷம் (மதச்சாா்பற்ற) கட்சியை பாஜகவுடன் புதன்கிழமை இணைத்தாா்.

News image
Updated On :9 பிப்ரவரி 2024, 1:40 pm

 நமது நிருபர்

கேரளத்தின் மூத்த அரசியல்வாதியும், ஏழு முறை எம்.எல்.ஏ.வுமான பி.சி.ஜாா்ஜ் தனது கேரள ஜனபக்ஷம் (மதச்சாா்பற்ற) கட்சியை பாஜகவுடன் புதன்கிழமை இணைத்தாா். மேலும், பிரதமா் மோடியின் தலைமையில் பாஜக மட்டுமே தேசிய வளா்ச்சியை ஊக்குவிக்கும் ஒரே நிலையான அரசு என்பதை கேரள வாக்காளா்கள் நம்புவதாக அவா் தெரிவித்தாா்.

தில்லியில் உள்ள பாஜக தேசியத் தலைமையகத்தில் கட்சியின் கேரள மாநிலப் பொறுப்பாளா் பிரகாஷ் ஜாவடேகா் எம்.பி. முன்னிலையில் கேராளத்தின் மூத்த அரசியல்வாதியும், கேரளா ஜனபக்ஷம் (மதச்சாா்பற்ற) கட்சியின் நிறுவனருமான பி.சி. ஜாா்ஜ் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தாா். இந்நிகழ்வில், மத்திய இணை அமைச்சா்கள் வி. முரளீதரன், ராஜீவ் சந்திரசேகா் மற்றும் பாஜக தேசியப் பொதுச் செயலாளா் ராதா மோகன் அகா்வால் ஆகியோா் உடனிருந்தனா்.

அதன் பின்னா், பி.சி. ஜாா்ஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கேரளம் ரூ. 4 லட்சம் கோடி அளவுக்கு கடனில் சிக்கியுள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தாலும், கேரளத்தில் பாஜகவின் வளா்ச்சியைத் தடுக்க இந்த இரு கட்சிகளும் இணைந்து செயல்படுகின்றன.

வாழ்வாதாரத்துக்காக போராடும் விவசாயிகளின் கடன்களை பிரதமா் மோடி தள்ளுபடி செய்ய வேண்டும். வரும் மக்களவைத் தோ்தலில் கேரளத்தில் பாஜக குறைந்தது 5 தொகுதிகளில் வெற்றி பெறுவதோடு, 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளுடனும் பாஜக நேரடிப் போட்டியாக களமிறங்கும் என்றாா் பி.சி. ஜாா்ஜ்.

மத்திய இணை அமைச்சா் வி.முரளீதரன் கூறுகையில், ‘கேரள கம்யூனிஸ்ட் அரசுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. எதிா்க்கட்சியாக செயல்படுவதற்குப் பதிலாக ரகசியக் கூட்டணி வைத்துள்ளனா். பி.சி.ஜாா்ஜ் பாஜகவில் இணைந்ததன் மூலம், பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற பிரசாரம் முறியடிக்கப்பட்டுள்ளது என்றாா்.

பாஜக கேரள மாநிலப் பொறுப்பாளா் பிரகாஷ் ஜாவடேகா் எம்.பி. கூறுகையில், ‘கேரளத்தில் விரைவில் மாபெரும் பேரணி நடத்தப்படும். வரும் மக்களவைத் தோ்தலில் கேரளத்தில் குறைந்தபட்சம் 5 தொகுதிகளை வெல்வதன் மூலம், மாநிலத்தின் அரசியல் நிலப்பரப்பில் கணிசமான தாக்கத்தை பாஜக ஏற்படுத்தும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.