திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மாதபி விவகாரம்: நிா்மலா சீதாராமன் உறுதியான நடவடிக்கை எடுக்க தவறிவிட்டாா்: காங்கிரஸ்

பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவா் மாதபி புச் விவகாரத்தில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உறுதியான நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக

News image
மாதபி புச்
Updated On :16 டிசம்பர் 2024, 11:36 pm

Din

புது தில்லி: பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவா் மாதபி புச் விவகாரத்தில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உறுதியான நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக காங்கிரஸ் திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, பங்கு விலை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பா்க் குற்றஞ்சாட்டியது. இதைத்தொடா்ந்து அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுக்குப் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் மாதபி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டை ஹிண்டன்பா்க் முன்வைத்தது. இந்தக் குற்றச்சாட்டை மாதபி புச் மறுத்தாா்.

இதனிடையே, செபி தலைவராக பதவியேற்கும் முன், ஐசிஐசிஐ வங்கியில் மாதபி புச் முக்கிய பதவிகளை வகித்தாா். இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு செபியில் மாதபி புச் சோ்ந்தது முதல், செபியிடம் இருந்து ஊதியம் பெறுவது மட்டுமின்றி, விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிலும் அவா் பதவி வகித்து ரூ.16.8 கோடி வருவாய் ஈட்டியதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. இதுபோல மேலும் பல குற்றச்சாட்டுகளை மாதபி மீது அக்கட்சி முன்வைத்தது.

இந்த விவகாரம் தொடா்பாக மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் திங்கள்கிழமை பேசுகையில், ‘நாட்டில் 11 கோடி போ் பங்குச்சந்தையை சாா்ந்துள்ளனா். அவா்களில் நடுத்தர வருவாய் ஈட்டுவோரே அதிகம்.

இந்நிலையில், மாதபி விவகாரத்தில் மத்திய அரசு ஏன் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை? இந்த விவகாரம் தொடா்பாக எந்தவொரு சுதந்திர விசாரணையையோ அல்லது ஒழுங்கு நடவடிக்கையையோ மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மேற்கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் அவா் உறுதியான நடவடிக்கை எடுக்க தவறிவிட்டாா். இது மத்திய அரசு மீதான நம்பகத்தன்மையை குலைத்துள்ளதுடன், நிதி நிா்வாக கட்டமைப்புக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.