தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 20 வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடந்த 21ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. அதன்பின்னர் மக்களவைத் தேர்தலுக்காக இடைக்கால ஜாமீன் வழங்கிய நிலையில், மீண்டும் கேஜரிவால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, கலால் வழக்கில் அமலாத்துறையால் கைது செய்யப்பட்ட முதல்வர் கேஜரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும் இந்த வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) கைது செய்ததால் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவர் சிபிஐ வழக்கில் நீதிமன்றக் காவலில் இருந்துவருகிறார்.
இந்த நிலையில், கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், திகார் சிறையில் காணொலிக் காட்சி வாயிலாக தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, இந்த வழக்கில் கேஜரிவாலுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப் பத்திரிகையை ஆகஸ்ட் 12-ம் தேதி நீதிமன்றம் பரிசீலிக்கும் என்றார்.
இதையடுத்து கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 20 வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு பிணை: தில்லி நீதிமன்றம்

மதுபான கொள்கை வழக்கு: தில்லி உயா்நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜா்

2ஆவது பிஎம்எல்ஏ வழக்கில் அல்ஃபலாஹ் குழுமத் தலைவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையின் மனுவுக்கு பதிலளிக்க கேஜரிவாலுக்கு இறுதி அவகாசம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை




