தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 9:58 pm

பெங்களூரு: பாலியல் சர்ச்சையில் சிக்கிய மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மஜதவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவின் பேரனும், ஹாசன் தொகுதியின் தற்போதைய எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா, ஹாசன் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது தொகுதிக்கான வாக்குப் பதிவு ஏப். 26-ஆம் தேதி நடைபெற்றது. அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு கர்நாடக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுப் படையை கர்நாடக அரசு அமைத்துள்ளது. இந்த விவகாரம் மஜதவுக்கு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மஜதவின் உயர்நிலைக் குழு கூட்டம் குழு தலைவர் ஜி.டி.தேவெ கெளடா தலைமையில் ஹுப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பிரஜ்வல் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர், கட்சியில் இருந்து அவரை இடைநீக்கம் செய்யுமாறு மஜத தேசியத் தலைவரும் முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கெளடாவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதுகுறித்து ஹுப்பள்ளியில் ஜி.டி.தேவெ கெளடா கூறியதாவது:

சிறப்புப் புலனாய்வுப் படையின் விசாரணை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளிப்போம். பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யுமாறு கட்சித் தலைவர் எச்.டி.தேவெ கெளடாவுக்கு பரிந்துரை செய்துள்ளோம். இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார்.

இதைத் தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து மஜத அறிவிப்பு வெளியிட்டது.

உயர்நிலைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி கூறுகையில், "பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய முடிவு செய்திருக்கிறோம். சிறப்புப் புலனாய்வுப் படை (எஸ்ஐடி) அறிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்கும் வரை பிரஜ்வல் ரேவண்ணா மீதான இடைநீக்க நடவடிக்கை அமலில் இருக்கும். குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவர் நிரந்தரமாக கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.