தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஓய்வுபெற்றாலும் மன்மோகன் என்றுமே கதாநாயகன்தான்: காங்கிரஸ்

News image

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் உயர் நிலைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

Updated On :3 ஏப்ரல் 2024, 8:19 am

மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஓய்வுபெறுகிறார். அவரது 33 ஆண்டு கால பதவி இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து மன்மோகன் சிங் ஓய்வுபெறுவதன் மூலம், ஒரு சகாப்தம் நிறைவு பெற்றுள்ளது. அவர் ஓய்வுபெற்றாலும், நடுத்தர மக்களுக்கும், இளைஞர்களுக்கும் எப்போதுமே கதாநாயகனாகவே திகழ்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள், தீவிர அரசியலிலிருந்து ஓய்வுபெற்றாலும்கூட, நாட்டுக்காகவும், நாட்டின் மக்களுக்காகவும் ஒலிக்கும் குரலாகவே நீங்கள் எப்போதும் நீடிப்பீர்கள், உங்களுக்கு அமைதியும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நீடிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்று கார்கே பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த நாடு குறிப்பாக, கிராம மக்கள், தங்களது வாழ்வுக்காகவும், வாழ்வாதாரங்களுக்காகவும் நீங்கள் கொண்டு வந்த திட்டங்கள் மூலம், மரியாதைக்குரிய வாழ்வை மேற்கொண்டதற்காக உங்களை எப்போதும் நினைவுகூர்வார்கள்.

பிரதமர் அலுவலகத்துக்கு மன்மோகன் சிங் ஏற்படுத்திய அமைதியான, வலுவான கண்ணியத்தை தற்போது தேசம் எதிர்பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எப்படி நிலவையும் சூரியனையும் மறைக்க முடியாதோ, அப்படித்தான் உண்மையையும் எப்போதும் மறைக்க முடியாது. நாட்டு மக்கள் விரைவில் உங்களின் வார்த்தைக்கான முக்கியத்துவத்தை அறிந்துகொள்வார் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.