திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கேஜரிவால் முதல் நாள் நேற்றிரவு வெகுநேரம் உறக்கமின்றி இருந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நகர நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து கேஜரிவால் திகாா் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிறை எண் 2-இல் அடைக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அவா் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கேஜரிவாலுக்கு வழங்கப்படும் சலுகைகள்
பொதுவாக திகார் சிறையில் உள்ள கைதிகளுக்கு தினசரி 2 வேளை பருப்பு சாம்பார், சப்ஜி மற்றும் 5 ரொட்டிகள் அல்லது அரிசி சாதம் வழங்கப்படும். இதுதவிர காலை மற்றும் மாலை என இருவேளைகளில் ஒரு கோப்பை தேநீர் வழங்கப்படும்.
முதல்வர் கேஜரிவால் நீரிழிவு நோயாளியாக உள்ளதால் அவருக்கு வீட்டில் தயாரித்த உணவுகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும், ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென குறைந்தால் சாப்பிடுவதற்கு உயர்தர சாக்லேட் ஆகியவையும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
திகார் சிறையில் இருக்கும் அடுத்த 14 நாள்களும் அவருக்கு படுக்கை விரிப்பு, தலையணை் ஆகியவை வழங்கப்படும். அவரது உடல்நிலையைக் கண்காணிக்கத் தேவையான மருத்துவ உபகரணங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர படிப்பதற்கு பகவத் கீதை, ராமாயணம் மற்றும் பிரதமர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்? ஆகிய புத்தகங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் அவர் அணிந்திருக்கும் மத லாக்கெட்டையும் அணிய அவருக்கு அனுமதி அளித்துள்ளது. இதைத்தவிர சிறையில் தொலைக்காட்சி பார்க்கும் வசதியும் உண்டு. அதில் அரசு தொடர்பான முக்கிய சேனல்களை பார்க்க முடியும்.
சிறை அதிகாரிகள் சிசிடிவி கேமராக்கள் மூலம் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவரது அறைக்கு வெளியே அவசர குழுவும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திகார் சிறையில் முதல் நாள் இரவை கழித்த கேஜரிவால் வெகுநேரம் உறக்கமின்றி இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவப் பரிசோதனையில் அவரது சர்க்கரை அளவு 50-க்கும் கீழ் குறைந்ததால் மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் அவருக்கு மருந்துகள் வழங்கப்பட்டன.
கேஜரிவாலை சந்திக்கும் ஆறு நபர்கள்
இந்தக் காலகட்டத்தில் தான் சந்திக்க விரும்பும் 6 பேரின் பட்டியலை கேஜரிவால் அளித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் அவரது மனைவி சுனிதா கேஜரிவால், அவர்களது மகன், மகள், அவரது தனிச் செயலாளர் பிபவ் குமார், ஆம் ஆத்மி கட்சியின் பொதுச் செயலாளர் சந்தீப் பதக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதே வழக்கில், கடந்தாண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவா் சஞ்சய் சிங், தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, பிஆா்எஸ் தலைவா் கே.கவிதா ஆகியோரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு! தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கு: பிணை கோரிய இடைத்தரகா் ஜேம்ஸின் மனு தள்ளுபடி

சென்னை ஐஐடி-யில் மாணவா்களுக்கு கோடைகால தொழில்நுட்ப பயிற்சிகள்

எல்பிஜி விநியோக ஒதுக்கீடு 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது: தில்லி அமைச்சா்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு





