அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

தில்லி வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு

செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி இரு நாள்கள் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு, தில்லியின் முக்கிய சாலைகளில் காவல்துறை வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

News image
தில்லியில் வாகனச் சோதனையில் ஈடுபடும் காவல்துறை
Updated On :6 பிப்ரவரி 2024, 1:11 pm

DIN

புது தில்லி: செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி இரு நாள்கள் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு, தில்லியின் முக்கிய சாலைகளில் காவல்துறை வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர், காவல்துறை சோதனையை முன்னிட்டு சில நிமிடங்கள் முன்கூட்டியே கிளம்புவது நல்லது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லியின் பல்வேறு பகுதிகளில், அனைத்து வாகனங்களையும் காவல்துறையினர் சோதனையிடும் பணி இன்று காலை தொடங்கியிருக்கிறது. 

இந்தியா கேட் மற்றும் இதர பகுதிகளில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை காலையிலும் திடீரென காவல்துறை சோதனை தொடங்கி நடைபெற்றது. சாலையில் வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

ஜி20 உச்சிமாநாட்டிற்கு வருகை தரும் விருந்தினா்களை வரவேற்க மற்றும் மாநாட்டுக்கான பல்வேறு அடிப்படைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜி20 நாடுகளுக்கான கூட்டமைப்பிற்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கும் நிலையில், அந்தக் கூட்டமைப்பின் உச்சிமாநாடு இந்த வாரத்தின் இறுதியில் தேசியத் தலைநகரமான தில்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு பிரம்மாண்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

மேலும், நகரம் முழுவதும் குறிப்பாக மாநாட்டுப் பிரதிநிதிகள் செல்லும் வழிகள் மற்றும் தங்கும் ஹோட்டல்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.