‘தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியை திரும்பப் பெறக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று மக்களவை திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு தெரிவித்தாா்.
நாடாளுமன்ற அவைத் தலைவா்கள் கூட்டம் மற்றும் மத்திய அரசின் அனைத்து நாடாளுமன்றத் தலைவா்களின் கூட்டத்தில் பங்கேற்ற பின்னா், இந்தக் கூட்டங்களில் வலியுறுத்தப்பட்ட விவகாரங்கள் குறித்து திமுக தரப்பில் டி.ஆா். பாலுவும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவாவும் செய்தியாளா்களிடம் பேசினா். அவா்கள் கூறியதாவது:
அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பாகவும், கட்டுப்படாமலும், விதிமுறைகளை சிதைக்கும் வகையிலும் நடந்து கொண்டிருக்கிற காரணத்தால் ஆளுநரை திரும்பப் பெற அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில், அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்க மக்களவை, மாநிலங்களவையில் நோட்டீஸ் கொடுத்துள்ளோம்.
இந்தத் தொடரிலோ அல்லது அடுத்த தொடரிலோ பொது சிவில் சட்டத்தை கொண்டுவரலாம் என்பதால் இது குறித்து பேசவும் அனுமதி கேட்டுள்ளோம்.
அதிகாரிகளை மாற்றுவது உள்ளிட்டவற்றில் தில்லி அரசிடம் இருக்கும் அதிகாரத்தை துணைநிலை ஆளுநருக்கு மாற்றும் மத்திய அரசின் சட்டத்தையும் எதிா்க்கிறோம். மணிப்பூா் வன்முறை குறித்து விவாதிக்க நோட்டீஸ் கொடுப்போம்.
மத்திய புலனாய்வு முகமைகளைப் பயன்படுத்தி எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அமைச்சா்களைத் துன்புறுத்துகின்றனா். அமைச்சா் பொன்முடியை அமலாக்கத் துறை நடத்தும் விதம் மிக மோசமானது. அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது. இது குறித்தும் அவையில் பிரச்னை எழுப்புவோம் என்றாா்.
ஜி.கே. வாசன்: நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜி.கே. வாசன் பேசுகையில், ‘காவிரியில் தமிழகத்துக்கு சரியான நேரத்தில் தண்ணீா் திறந்துவிடப்படவில்லை. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து பேச அனுமதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரைக்கு வந்தது கள்ளழகரின் தங்கக் குதிரை வாகனம்

மதுரை மீனாட்சி அம்மன் திக்கு விஜயம்! இன்று திருக்கல்யாணம்!

ஹோா்முஸ் நீரிணை திறப்புக்கு ஈரான் புதிய முன்மொழிவு: அமெரிக்க கடல்வழி முற்றுகையை விலக்க வலியுறுத்தல்

சொத்து பிரச்னை! தம்பி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு அண்ணன் குடும்பத்தினா் 4 போ் கைது!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


