அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

தில்லியில் இயல்புநிலை திரும்பலாம்.. ஆனால் ஒரே ஒரு கண்டீஷன்

இன்னும் ஒரு சில நாள்களில் புது தில்லியில் இயல்பு நிலை திரும்பலாம்.. மேலும் மழை பெய்யாவிட்டால் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:03 pm

DIN

புது தில்லி: யமுனையில் வெள்ளப்பெருக்கு குறைந்து வருவதால், இன்னும் ஒரு சில நாள்களில் புது தில்லியில் இயல்பு நிலை திரும்பலாம்.. மேலும் மழை பெய்யாவிட்டால் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

யமுனையில் வெள்ளப்பெருக்குக் குறைந்தாலும், நகரம் முழுவதும் வெள்ள பாதிப்பு அப்படியேதான் இருப்பதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

புது தில்லியில் கனமழையோ பலத்த மழையோ பெய்யாத நிலைடியில், அண்டை மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக யமுனையில் ஏற்பட்ட வெள்ளமே, தில்லியில் இந்த அளவுக்கு வெள்ள பாதிப்பு ஏற்படக் காரணமாக அமைந்துவிட்டது.

எனவே, மழை காரணமாக வெள்ள பாதிப்பு என்றால் பரவாயில்லை.. அண்டை மாநிலங்களில் பெய்த மழையால் வெள்ளம் என்பதை தடுக்க நிச்சயம் தில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கருதுகிறார்கள்.

இந்த நிலையில்தான், யமுனையில் வெள்ளப்பெருக்குக் குறையத் தொடங்கியிருப்பதாகவும், ஓரிரு நாள்களில் புது தில்லியில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பலாம்.. ஆனால் மேலும் சில நாள்களுக்கு மழை பெய்யாமல் இருந்தால்தான் என்று  என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தலைநகர் தில்லிக்கு ஏற்பட்ட இந்த மோசமான நிலைக்கு பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிக்கொள்கிறார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.