சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

 குடியரசு தினத்தை முன்னிட்டு திரௌபதி முர்மு இன்று உரை

குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதன்கிழமை மாலை உரையாற்றவிருக்கிறார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:53 pm

DIN

குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதன்கிழமை மாலை உரையாற்றவிருக்கிறார்.
 நாட்டின் 74-ஆவது குடியரசு தினம், வியாழக்கிழமை (ஜன.26) கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, தேசியத் தலைநகர் தில்லியில் கடமைப் பாதையில் நடைபெறும் கண்கவர் விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடி ஏற்றவுள்ளார். இதைத் தொடர்ந்து, நாட்டின் ராணுவ வல்லமையையும், கலாசார பெருமையையும் பறைசாற்றும் பிரம்மாண்ட அணிவகுப்பை அவர் பார்வையிடவுள்ளார்.
 இதற்கு முன்பாக, நாட்டு மக்களுக்கு புதன்கிழமை மாலையில் திரௌபதி முர்மு உரையாற்றவிருக்கிறார். அவரது உரை, அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பு செய்யப்படும். அத்துடன், அனைத்து தூர்தர்ஷன் சேனல்களிலும் ஒளிபரப்பாகும். ஹிந்தியிலும், பின்னர் ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளிலும் ஒலிபரப்பு செய்யப்படும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.