புது தில்லி: ஒரு சில அல்லது மேல்தட்டு மக்கள்தான் அதிக வரி செலுத்துகிறார்கள் என்ற மாயத் தோற்றத்தை உடைக்கும் வகையில், ஆக்ஸ்ஃபாம் நடத்திய ஆய்வில் கிடைத்திருக்கும் தகவல் அமைந்துள்ளது.
இந்த ஆய்வறிக்கை, நாட்டில் உள்ள ஏழைகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகைதான், பெரும்பாலான மறைமுக வரியை அல்லது நுகர்வோர் தொடர்பான வரிகளை செலுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆய்வறிக்கையின்படி, மொத்த ஜிஎஸ்டி தொகையில் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்ட தொகையை அதாவது 64.3 சதவீதத்தை செலுத்துவது நமது அடித்தட்டு மக்கள்தான். இதில் மூன்றில் ஒரு பங்கு தொகையை நடுத்தர மக்களும், வெறும் 3-4 சதவீத ஜிஎஸ்டி தொகையைத்தான் நாட்டில் வாழும் கணக்காரர்கள் செலுத்துகிறார்களாம்.
இதையும் படிக்க.. பாலமேடு ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் 9 காளைகளை அடக்கிய இளைஞர் பலி
2021 - 22ஆம் ஆண்டில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வசூலித்த மொத்த ஜிஎஸ்டி ரூ.14.7 லட்சம் கோடி. தற்போதைய நிலவரத்தைப் பார்த்தால், 2022 - 23ஆம் நிதியாண்டில் இது ரூ.18 லட்சம் கோடியை எட்டும் என்று கூறப்படுகிறது.
அதாவது, கீழ்த்தட்ட மக்கள் அல்லது மிகக் குறைவான வருவாய் ஈட்டும் மக்கள்தான், மறைமுக வரிகளை அதிகம் செலுத்துவதும், நடுத்தர மக்கள் கூட 40 சதவீத மறைமுக வரியைத்தான் செலுத்துகிறார்கள் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
அதாவது, அனைத்து இந்திய அளவில் பார்த்தால், உயர்தட்ட மக்களை விடவும் 6 மடங்கு அதிகமாக மறைமுக வரியை கீழ்த்தட்டு மக்கள் செலுத்துகிறார்கள்.
எனவே, மத்திய அரசு, மிகவும் அத்தியாவசியப் பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்றும், அதிலும் குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் வாங்கும் பொருள்களுக்கான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கை வலியுறுத்தியிருக்கிறது. அதேவேளையில், அதிகம் செலவிட வேண்டிய மற்றும் அலங்கார, ஆடம்பர பொருள்களின் வரியை உயர்த்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், வருவாயையும் பெருக்க முடியும், ஏழைகளின் சுமை இயற்கையாகக் குறைக்கப்பட்டு, அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்க உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்

கரூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன்: எம்.ஆா். விஜயபாஸ்கா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


