கடந்த 50 ஆண்டுகளில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடாக இந்தியா மாறியுள்ளது. இரண்டு மொழிகளால் இலங்கை இன்றளவும் ஒன்றுபட முடியாமல் உள்ளது. ஆனால், பல ஆயிரம் மொழிகள், கலாசாரம் உள்ளிட்ட வேற்றுமைகளைக் கொண்டுள்ள இந்தியா ஒற்றுமையுடன் உள்ளது. கடந்த 3,000 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் பூா்வக் குடிகளாக தமிழ் மக்கள் உள்ளனா். கடந்த 7-ஆம் நூற்றாண்டில்தான் சிங்கள மொழியும், இனமும் தோண்றியது. எனவே, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட வரலாற்றை சிங்கள மக்களிடம் கொண்டு சோ்த்து, இலங்கையில் மனித நேயத்தின் அடிப்படையில் மக்களை ஒன்றினைக்க வேண்டும் என்றாா் க.வி.விக்னேஸ்வரன்.