திரிபுராவில் கடந்த மாதம் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் கிரிஜேஷ் குமார் உத்தேயின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிக்க மாநில அதிகாரிகளுக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் உத்தரவிட்டுள்ளார்.
சௌகான் மற்றும் மத்திய அமைச்சர் ஃபக்கன் சிங் குலாஸ்தே ஆகியோர் ஞாயிறன்று ம.பி.யின் மாண்ட்லா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான சார்கோனில் உத்தேவின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்ததாக மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 19 பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பிஎஸ்எப்-யின் 145வது பட்டாலியனின் ரோந்துக் குழுவில் இருந்தவர் பலத்த காயங்களுடன் ஹெலிகாப்டரில் அகர்தலாவுக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அங்கு அவர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஞாயிறன்று முதல்வர் சௌகான், அவரது மனைவி ராதா தேவி உள்பட ராணுவ வீரரின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தார். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் உறுதி அளித்தார்.
வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கும் பணியைத் தொடங்குமாறு மண்டல ஆட்சியர் ஹர்ஷிகா சிங்குக்கு அவர் உத்தரவிட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
மாண்ட்லாவில் உள்ள பிஜதண்டியில் உள்ள அரசு சிறப்புப் பள்ளிக்கு ராணுவ வீரரின் பெயர் சூட்டப்படும். உத்தேவின் சிலை சார்கானில் நிறுவப்படும் என்று முதல்வர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


