கடந்த 1997ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தில்லியின் துக்ளகாபாத் பகுதியில் வசித்து வந்த கிஷண் லால் கொலை செய்யப்பட்டார். கடந்த 25 ஆண்டுகளாக குற்றவாளியை தேடி வந்த காவலர்கள், ஒரு மாத காலம் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வழக்கில் துப்புதுலங்கியுள்ளனர்.
கிடைத்த வேலைகளைச் செய்து குடும்பத்தை நடத்தி வந்த கிஷண் லால் கொல்லப்படும்போது, அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இதில் குற்றவாளி ராமு தலைமறைவாகிவிட, வழக்கு கிடப்பில் போடப்பட்டது. தற்போது நிலுவையில் இருக்கும் வழக்குகளை விசாரித்து வடக்கு மாவட்ட தில்லி காவல்துறை குழுவினர் இந்த வழக்கை 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தூசு தட்டி எடுத்தனர்.
இதன் பிறகு, கிஷண் லாலின் மனைவி சுனிதாவுக்கு தில்லி காவல்துறையிடமிருந்து ஒரு நாள் அழைப்பு வந்தது. லக்னௌ வருமாறு. சுனிதா தனது 24 வயது மகனுடன் லக்னெள் சென்ற போது, கணவரைக் கொலை செய்த 50 வயது ராமு கைது செய்யப்பட்டிருப்பதை காவல்துறையினர் தெரிவித்தனர். சுனிதா குற்றவாளியை அடையாளம் காட்டினார்.
25 ஆண்டு கால வழக்கில், நேரில் பார்த்த சாட்சியமோ, குற்றவாளியின் புகைப்படமோ, குற்றவாளி எங்கிருக்கிறார் என்பது குறித்து ஒரு துப்பும் காவல்துறைக்குக் கிடைக்கவில்லை.
இதற்காக அமைக்கப்பட்ட காவல்துறை தனிப்பிரிவினர் பல மாதங்கள் தில்லி மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது, காவலர்கள் காப்பீட்டு முகவர்கள் போல நடித்து ராமுவின் உறவினர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தனர். அதைக் கொண்டு, ராமுவின் மகன் ஆகாஷின் செல்லிடப்பேசி எண்ணைப் பெற்று, அவனது முகநூல் பக்கத்தின் வாயிலாக, அவர் எங்கே வாழ்கிறார் என்பதை காவலர்கள் கண்டறிந்தனர்.
பிறகு ஆகாஷைப் பிடித்து விசாரித்த காவலர்கள், தனது தந்தை அசோக் யாதவ் என்ற பெயரில் ரிக்சா ஓட்டி வாழ்ந்து வருவதைக் கூறினார்.
இதையடுத்து, இ-ரிக்சா முகவர் என்ற பெயரில் பல ரிக்சா ஓட்டுநர்களைத் தொடர்பு கொண்டு பேசிய காவலர்கள், ஒரு மாத காலம் பல ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தி, இறுதியாக, அசோக் யாதவ் என்ற நபரிடம் பேசினோம். அவர் மீது சந்தேகம் வந்து, அவரைக் கைது செய்து உறவினர்களிடம் அவர் ராமுதான் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், 1997ஆம் ஆண்டு கிஷண் லாலை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


