பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மகளின் உடலை 44 நாள்கள் உப்பில் பாதுகாத்த தந்தை: மறு உடல் கூறாய்வுக்காக தோண்டி எடுப்பு

பழங்குடியினத்தைச் சேர்ந்த 21 வயது பெண்ணின் உடலை அவரது தந்தை கடந்த 44 நாள்களாக உப்பிட்டு பாதுகாத்து வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

மகளின் உடலை 44 நாள்கள் உப்பில் பாதுகாத்த தந்தை: மறு உடல் கூறாய்வுக்காக தோண்டி எடுப்பு

Updated On :16 செப்டம்பர் 2022, 11:13 am


மும்பை: மகாராஷ்டிர மாநிலம் நந்துர்பார் பகுதியில், பழங்குடியினத்தைச் சேர்ந்த 21 வயது பெண்ணின் உடலை அவரது தந்தை கடந்த 44 நாள்களாக உப்பிட்டு பாதுகாத்து வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பதை நிரூபிக்க, இரண்டாவது உடல் கூறாய்வு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்த தந்தை, தனது மகளின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு பதிலாக, குழிதோண்டி அதில் உப்பைக் கொட்டி அதற்குள் மகளின் உடலை வைத்து பாதுகாத்து வந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு நியமிக்கப்பட்டு, வெள்ளியன்று அந்தப் பெண்ணின் உடல் மறு உடல்கூறாய்வு செய்யப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக வியாழக்கிழமையன்று பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தப் பெண் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார் அளித்திருந்தார். ஆனால், நந்துர்பார் அரசு மருத்துவமனையில் உடல்கூறாய்வு செய்யப்பட்டு, பலாத்காரம் செய்யப்படவில்லை என்று கூறி, தற்கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, பெண்ணின் உடல் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், இந்த வழக்கை காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, தந்தை உள்பட ஒட்டுமொத்த குடும்பதும் நீதி கேட்டு போராடி வந்தனர்.

உடல் கூறாய்வு முடிந்து தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பெண்ணின் உடலை குழி தோண்டி அதில் உப்பு கொட்டி அதற்குள் பாதுகாத்து வந்தனர்.

இந்த நிலையில்தான், அந்தப் பெண்ணின் உடலை மறு உடல் கூறாய்வு செய்ய அதிகாரிகள் ஒப்புக் கொண்டு மும்பைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.