உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற புனிதத் தலமான கேதார்நாத் கோயிலுக்குக் கடந்த 126 நாள்களில் 11 லட்சம் பக்தர்கள் வருகை தந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட நீதிபதி மயூர் தீட்சித் கூறுகையில்,
இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றுநோய் காரணமாக யாத்திரை பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை யாத்திரை முறையாக நடைபெற்று வருகின்றது.
கடந்த 2019ஆம் ஆண்டில் 10 லட்சம் பக்தர்கள் வருகைக்கான சாதனையை இந்தாண்டு முறியடித்துள்ளது.. 126 நாள்களில் 11 லட்சம் பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர்.
ஆரம்பக் கட்டத்தில் அதிகப்படியான கூட்டத்தால் சிக்கல்கள் ஏற்பட்டன. தூய்மைப் பணியிலும் சில குறைபாடுகள் இருந்தன. ஆனால் அனைத்து ஏற்பாடுகளும் சரி செய்யப்பட்டுள்ளன.
ஐநூறுக்கும் மேற்பட்ட துப்பரவு பணியாளர்கள் ருத்ரபிரயாக் முதல் கேதார்நாத் வரை தங்கள் சேவைகளை வழங்கி வருகின்றனர். பக்தர்களுக்கு நடைபாதை உள்ளிட்ட சிறந்த வசதிகளை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், கேதார்நாத் பயணத்தில் எந்த பிரச்னையும் ஏற்படக்கூடாது என்று அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை ஏராளமான பயணிகள் வந்துள்ளனர். மேலும் பயணத்திற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன. அனைத்து உணவகங்கள், விடுதிகள் முன்கூட்டியே முன்பதிவு செய்யப்படுகின்றன.
இந்தாண்டு, கேதார்நாத்துக்கு வருகைதரும் பக்தர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வருமான வரித் துறை சோதனை உண்மைதான்! இன்று ஆதாரங்களை வெளியிடுகிறார் செல்வப்பெருந்தகை!

எஸ்ஐஆா் பணிகளாலும் வாக்குப்பதிவு அதிகரிப்பு!

வாக்கு சதவிகிதம் அதிகரிப்பா? தலைமைத் தேர்தல் ஆணையரின் நகைச்சுவை: திமுக

அதிருப்திக்கு மத்தியிலும் நரிக்குறவா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


