பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இந்தூரில் ரூ.3.72 கோடி வெளிநாட்டு தங்கக் கட்டிகள் பறிமுதல்: 3 பேர் கைது

இந்தூர் அருகே காரில் ரூ.3.72 கோடி மதிப்புள்ள 7.1 கிலோ வெளிநாட்டு தங்கக் கட்டிகளை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image

gold041130

Updated On :7 செப்டம்பர் 2022, 7:31 am

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே காரில் ரூ.3.72 கோடி மதிப்புள்ள 7.1 கிலோ வெளிநாட்டு தங்கக் கட்டிகளை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

உளவுத்துறைக்கு வந்த தகவலின்படி, ஆகஸ்ட் 30 அன்று இந்தூர் அருகே மும்பை-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் 2 பயணிகளுடன் வந்த காரை  மறித்து சோதனை செய்தபோது 7.1 கிலோ எடையுள்ள வெளிநாட்டு தங்கம் 8 கட்டிகள் இருப்பது தெரியவந்தது. 

காரில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், இருவருக்கு தங்கக் கட்டிகளை சப்ளை செய்ததாகக் கூறப்படும் மும்பையைச் சேர்ந்த மேலும் ஒரு சிண்டிகேட் உறுப்பினரை டிஆர்ஐ கைது செய்ததாக அந்த அதிகாரி கூறினார்.

தங்கம் கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டு, இதுதொடர்பாக மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.