பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பெங்களூருவில் கனமழை: மின்சாரம் பாய்ந்து பெண் பலி

பெங்களூருவில் சித்தாபுராவில் மின்சாரம் பாய்ந்து பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :6 செப்டம்பர் 2022, 6:24 am

பெங்களூருவில் சித்தாபுராவில் மின்சாரம் பாய்ந்து பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செப்டம்பர் 5ஆம் தேதி இரவும் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துகொண்டு, வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தும், வாகனங்கள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

இந்நிலையில் சித்தாபுராவில் மழைநீரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சாலையில், மின்கம்பத்தில் சிக்கிய 23 வயது பெண் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக போலீசார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

திங்கள்கிழமை இரவு, பாதிக்கப்பட்ட பெண் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

இருசக்கர வாகனம் திடீர் பழுதடைந்ததால், எதிர்பாரதவிதமாக பெண் மின் கம்பத்தைத் தொட்டுள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்தாக கூறப்படுகிறது. உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 

இறந்தவர் தனியார்ப் பள்ளி ஒன்றில் நிர்வாக பிரிவில் பணியாற்றி வந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.