போர்ட் பிளேர்: கூட்டு பாலியல் புகார் கூறப்பட்ட அந்தமான் முன்னாள் தலைமைச் செயலர் ஜிதேந்திர நரைன், சிறப்பு விசாரணைக் குழு முன்பு இன்று நேரில் ஆஜரானார்.
போராட்டக்காரர்களிடமிருந்து தப்பிக்கும் வகையில், போர்ட் பிளேரில் உள்ள சிறப்பு விசாரணை அலுவலகத்துக்கு வேறு வழியாகக் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையும் படிக்க.. மாணவி சத்யாவை கொன்றது ஏன்? சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்
பெண்களுக்கு எதிராக மிக மோசமான குற்றங்கள் நடந்துள்ளன. எங்களுக்கு நீதி வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.
கொல்கத்தா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து மேற்கு வங்கத்திலிருந்து மூத்த அகாரிகள் இன்று, நரைனிடம் விசாரணை நடத்த போர்ட் பிளேர் சென்றிருந்தனர். மூத்த அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் அவர்கள் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அக்டோபர் 28ஆம் தேதி, சிறப்பு விசாரணைக் குழு முன்பு, நரைன் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததன் அடிப்படையில் இன்று அவர் ஆஜரானார். இந்த வழக்கு பொய்யானது என்பதை தான் நிரூபிப்பேன் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நரைன் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அந்தமான் - நிகோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திர நரைன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை விசாரித்த காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
ஜிதேந்திர நரைனும், தொழிலாளர் துறை ஆணையாளராக இருந்த ரிஷி என்பவரும் இணைந்து அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20க்கும் மேற்பட்ட பெண்களை, நரைன் வீட்டில் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சில பெண்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருப்பதும் தெரிய வந்திருப்பதாகக் கூறப்பட்டது.
20 வயது பெண் ஒருவர், முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திர நரைன் மற்றும் ஆர்எல் ரிஷி ஆகியோர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்ததைத் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தனக்கு தெரிந்தவர் மூலம் ரிஷி அறிமுகமானார் என்றும், ரிஷி தான், தன்னை நரைன் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும் அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார். தனக்கு மது கொடுத்து, இருவரும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
புகார் அளித்த பெண் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் தொலைபேசி அழைப்புகள் பதிவானதன் அடிப்படையில், பெண் கூறியது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது, மூன்று பேரின் செல்லிடப்பேசிகளும் ஒரே டவரில் இருந்து இயங்கியிருப்பதும், அவர் சொல்லும் குற்றச்சாட்டு நேரமும் சரியாக இருக்கிறது என்று காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து முதன்மைச் செயலாளரை பணியிடை நீக்கம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்பிறகு, பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான செய்திகள் வெளியே வந்தன.
அக்டோபர் 17ஆம் தேதி நரைன் பொறுப்பிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நவம்பர் 14ஆம் தேதி வரை அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவருடன் ரிஷியும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாபநாசம் நாதக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்: சீமான்

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


