தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பெண் கைதிகள் கர்வா சௌத் கொண்டாட சிறைத் துறை ஏற்பாடு

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் சிறையில் பெண் கைதிகள் கர்வா சௌத் கொண்டாட சிறை நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

News image

பெண் கைதிகள் கர்வா சௌத் கொண்டாட சிறைத் துறை ஏற்பாடு

Updated On :13 அக்டோபர் 2022, 12:23 pm


ஷாஜஹான்பூர்: வட இந்திய மக்கள் வெகுச் சிறப்பாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று கர்வா சௌத். இந்த பண்டிகையன்று விரதமிருந்து பெண்கள் பூஜை செய்வது வழக்கம். எனவே, உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் சிறையில் பெண் கைதிகள் கர்வா சௌத் கொண்டாட சிறை நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

தனது கணவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ விரும்பி, காலை முதல் இரவு வரை பெண்கள் விரதம் இருப்பது வழக்கம். எனவே, பெண் கைதிகள் காலை முதல் விரதம் இருக்க வசதியாக, பழங்கள் மற்றும் சில நீராகாரம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், மாலையில் விரதத்தை முடிக்கும் முன் கணவரைப் பார்ப்பது வழக்கம் என்பதால், சிறைக் கைதிகளை நாளைய தினம் அவரது கணவர்கள் வந்து சந்திக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிறைத் துறை கூறுகையில், திருமணமான 66 பெண் கைதிகள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது கணவர்களும் இங்கேயே அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விரதம் இருக்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.