தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் வந்த 191 டிரோன்கள்

191 டிரோன்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்திருப்பதாகவும், அதில் 7 சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இது உள்நாட்டு பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

News image

பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் வந்த 191 டிரோன்கள்

Updated On :12 அக்டோபர் 2022, 11:52 am

புது தில்லி: பாகிஸ்தானிலிருந்து கடந்த 9 மாதங்களில் மட்டும் 191 டிரோன்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்திருப்பதாகவும், அதில் 7 சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இது உள்நாட்டு பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இதுபோன்ற பாகிஸ்தானின் அத்துமீறல்களை எதிர்கொள்ள நிறுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்புப் படையினர் அளித்த தரவுகளை மத்திய அரசு பகிர்ந்துகொண்டுள்ளது.

அதன்படி,  இதுவரை 191 டிரோன்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளன. அதில் 171 டிரோன்கள் பஞ்சாப் செக்டார் பகுதி வழியாகவும், 20 டிரோன்கள் ஜம்மு செக்டார் பகுதி வழியாகவும் பாகிஸ்தானிலிருந்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 191 டிரோன்களில், 7 டிரோன்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது. இந்த டிரோன்கள் மூலம், ஆயுதங்கள், வெடிபொருள்கள், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்களை பாகிஸ்தானிலிருக்கும் பயங்கரவாத குழுக்கள், இந்திய எல்லைக்குள் ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகளுக்கு அனுப்பி வைப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இதுபோன்ற டிரோன்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில், சிறப்பு கண்காணிப்பை மேற்கொள்ளவும், டிரோன்கள் நடமாட்டத்தைத் தடுக்க எடுக்க செய்ய வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து உரிய அமைப்புகளிடம் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை கேட்டுள்ளது. அதேவேளையில், சிறப்பு கண்காணிப்பில் ஈடுபடுமாறு பாதுகாப்புப் படைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.