மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மழையால் ஏற்கனவே மிதக்கும் மும்பைக்கு மேலும் மஞ்சள் எச்சரிக்கை

மும்பையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியிருக்கும் நிலையில் தானே, பல்கார் மற்றும் கொங்கன் பகுதிகளுக்கு அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 அக்டோபர் 2022, 11:56 am


மும்பை: வெள்ளிக்கிழமை பெய்த கனமழை காரணமாக மும்பையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியிருக்கும் நிலையில்  மும்பை மட்டுமல்லாமல் தாணே, பல்கார் மற்றும் கொங்கன் பகுதிகளுக்கு அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கை செய்தியில், மும்பையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பரவலாகப் பெய்யும். மழையின் போது மணிக்கு சுமார் 30 - 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை மாநகரம் முழுவதும் பரவலாக மேகக் கூட்டங்களால் சூழப்பட்டுள்ளது. மதியத்துக்குப் பிறகு பரவலாக பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. எனினும் சாலை மற்றும் ரயில் போக்குவரத்துகளுக்கு பாதிப்பில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.