புது தில்லி: காங்கிரஸ் கட்சிக்கு சாபமிடுவதற்கு பதிலாக, குஜராத் மாநிலத்தில் பாஜக செய்த தவறான ஆட்சிமுறை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு எடுத்துச் சொல்லலாமே என்று கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சி குறித்து பிரதமர் பேசிய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. 500 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன: நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்
குடியரசுத் தலைவர் தேர்தேலில் திரௌபதி முர்மு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் காங்கிரஸ் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியலை நடத்துவதாகவும், சமூக விரோதிகளுக்கு ஆதரவு அளிக்கும் கட்சி என்றும் சரமாரியானக் குற்றச்சாட்டுகள் பிரதமர் வைத்திருந்தார்.
இவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருக்கும் கார்கே, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சிக்கு சாபமிடுவதற்கு பதிலாக, குஜராத்தில் பாஜக செய்த தவறான ஆட்சிமுறை குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்லலாம். ஏன் குஜராத்தில் உள்ள குழந்தைகளின் எதிர்காலத்தை வீணாக்குகிறீர்கள்? சத்துணவு பெற்ற, எடை குறைவான குழந்தைகளைக் கொண்ட 30 மாநிலங்களின் பட்டியலில் குஜராத் ஏன் 29வது இடத்தில் இருக்கிறது? குழந்தைகள் இறப்பு விகிதத்தில் குஜராத் ஏன் 19வது இடத்தில் இருக்கிறது என்பதற்கு பதில் இருக்கிறதா? என்றும் கார்கே கேட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress

மே. வங்கத்தில் திரிணமூல், கேரளத்தில் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக வெற்றி: ஃபரூக் அப்துல்லா

ஈரான் தலைநகரில் நாளை முதல் மீண்டும் சர்வதேச விமானங்கள் இயக்கம்!

பலம் வாய்ந்த ஆர்சிபியுடன் மோதும் குஜராத்: சாய் கிஷோருக்கு வாய்ப்பு கிடைக்குமா?
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

