திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

முன்னாள் முதல்வா் ஓம்பிரகாஷ் செளதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை

ஓம் பிரகாஷ் செளதாலா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image

முன்னாள் முதல்வா் ஓம்பிரகாஷ் செளதாலா

Updated On :27 மே 2022, 9:38 am

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் ஹரியாணா மாநில முன்னாள் முதல்வா் ஓம் பிரகாஷ் செளதாலா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சொத்து சோ்த்த வழக்கில் ஓம் பிரகாஷ் செளதாலா குற்றவாளி என்று தில்லி நீதிமன்றம் கடந்த வாரம் சனிக்கிழமை தீா்ப்பளித்திருந்தது.

அவருக்கான தண்டனை தொடா்பான வாதங்கள் நிறைவுபெற்ற நிலையில், ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிபதி விகாஸ் துஹுல் தீர்ப்பளித்துள்ளார்.

1993 முதல் 2006-ஆம் ஆண்டு வரையில் ஹரியாணா முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் செளதாலா வருமானத்துக்கு அதிகமாக ரூ.6.09 கோடி சொத்து சோ்த்ததாக 2010, மாா்ச் 26-ஆம் தேதி சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கு தில்லி ரோஸ் அவென்யு பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில், முன்னாள் முதல்வா் ஓம் பிரகாஷ் செளதாலாவை குற்றவாளி என சிறப்பு நீதிபதி விகாஸ் துஹுல் கடந்த வாரம் தீா்ப்பளித்தாா்.

முன்னதாக, ஹரியாணா முதல்வராக இருந்த காலத்தில் ஆசிரியா் பணி நியமனத்தில் ஊழல் செய்ததாக 2013-இல் ஓம் பிரகாஷ் செளதாலா, அவரது மகன் அஜய் செளதாலா ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்த செளதாலா 10, 12-ஆம் வகுப்பு தோ்வில் வெற்றி பெற்றாா். 87 வயதாகும் ஓம் பிரகாஷ் செளதாலா ஜூலை 2021-இல் சிறையில் இருந்து விடுதலையானாா். இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் தற்போது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.