தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஒரு ஆண் இன்னொரு ஆணை மணந்தால் என்னவாகும்? கேட்பது ஒரு முதல்வர்

வரதட்சணை முறையை கடுமையாக விமரிசித்திருக்கும் பிகார் முதல்வர் நிதிஷ் குமார், ஒரு பெண்ணை மணமுடிக்க அவரிடமே வரதட்சணை கேட்பதைவிட மோசமானது வேறு எதுவும் இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

News image

நிதீஷ் குமார் (கோப்புப் படம்)

Updated On :25 மே 2022, 12:23 pm

பாட்னா: வரதட்சணை முறையை கடுமையாக விமரிசித்திருக்கும் பிகார் முதல்வர் நிதிஷ் குமார், ஒரு பெண்ணை மணமுடிக்க அவரிடமே வரதட்சணை கேட்பதைவிட மோசமானது வேறு எதுவும் இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும், ஒரு வேளை, ஒரு ஆண் மற்றொரு ஆணையே மணந்தால் குழந்தை பிறப்பு என்னவாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாட்னாவில் கட்டி முடிக்கப்பட்ட மகளிர் விடுதியை திறந்து வைத்துப் பேசிய நிதிஷ் குமார் இவ்வாறு கூறினார்.

அவர் பேசுகையில், எங்கள் காலத்தில் எல்லாம் கல்லூரிகளில் பெண்களே இருக்க மாட்டார்கள். அது எவ்வளவு மோசமாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். ஆனால் இன்றோ, அனைத்துத் துறைகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். அது பொறியியலாகவோ அல்லது மருத்துவமாகவோ இருக்கட்டும். மகளிர் சுயஅதிகாரம் பெறுவதற்கு பல்வேறு முன்னெடுத்தல்கள் செய்யப்பட்டு வருகிறது. வரதட்சணை முறைக்கும் குழந்தைகள் திருமணத்துக்கும் எதிரான விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.