தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) நிறுவன முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, அந்த நிறுவனத்தின் முன்னாள் செயல்பாட்டுக் குழு அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனின் ஜாமீன் மனு மனுவை தள்ளுபடி செய்த தில்லி நீதிமன்றம் தனது உத்தரவில் இமயமலை யோகி என்ற வார்த்தையை குறிப்பிட்டுள்ளது.
இமயமலை யோகி என்ற மர்மத்திரையை விரைவில் நீக்கிடுங்கள், இமயமலை யோகியின் உண்மையான முகத்தை வெளிப்படுத்துங்கள், இமயமலையில் வாழும் பனிமனிதனைப் போல மர்மமாகவே இருந்துவிடாமல் என்று, தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக, ஆனந்த் சுப்ரமணியன்தான், சித்ரா ராமகிருஷ்ணா குறிப்பிடும் இமயமலை யோகி என்று விசாரணை அமைப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க.. ஆதார் அட்டையில் செல்லிடப்பேசி எண் சரியாக உள்ளதா? அறிய எளிய வழி
என்எஸ்இ கணினி சேமிப்பகத்திலிருந்து பங்குச்சந்தை விவரங்களை பிற தரகா்களுக்கு முன்பாக ஓபிஜி செக்யூரிட்டீஸ் என்ற பங்குத் தரகு நிறுவனம் அறிந்து வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பங்குச் சந்தைத் தரகா்களுக்கு என்எஸ்இ வழங்கும் கோ-லொகேஷன் என்ற வசதி மூலம் என்எஸ்இ கணினி சேமிப்பகத்துக்குள் மிக விரைவாக உள்நுழைந்து, அந்த முறைகேடு மேற்கொள்ளப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. என்எஸ்இ, பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி அதிகாரிகளின் துணையுடன் இந்த முறைகேடு நடைபெற்ாகவும், இதன் மூலம் முறைகேடாகப் பெரும் லாபம் ஈட்டப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதுதொடா்பாக ஓபிஜி செக்யூரிட்டீஸ், அதன் உரிமையாளா் சஞ்சய் குப்தா, என்எஸ்இ, செபி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்குத் தொடா்பாக என்எஸ்இ நிறுவனத்தின் முன்னாள் நிா்வாக இயக்குநா்-தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவையும், அந்த நிறுவனத்தின் முன்னாள் செயல்பாட்டுக் குழு அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனையும் சிபிஐ கைது செய்துள்ளது.
வெளிநாடுகளுக்குப் பயணம்: இந்நிலையில், ஆனந்த் சுப்ரமணியன் ஜாமீன் கோரி தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டதாவது:
கோ-லொகேஷன் வசதி மூலம் நடைபெற்ற முறைகேட்டைத் தவிர, மேலும் பல தகாத செயல்கள் நடைபெற்றுள்ளன. சித்ராவும், ஆனந்த் சுப்ரமணியனும் குறைவாக வரி விதிக்கப்படும் நாடுகளுக்குச் சென்று வந்துள்ளனா். அதன் மூலம் அவா்கள் நிதி ஆதாயங்களை அடைந்துள்ளனா். அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆனந்த் சுப்ரமணியன் விசாரணையின்போது சரிவர ஒத்துழைக்கவில்லை. அவா் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லக்கூடும். எனவே அவருக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து சிறப்பு நீதிபதி பேசுகையில், ‘‘ஆனந்த் சுப்ரமணியன் என்எஸ்இயில் சோ்ந்தபோது அவரின் ஆண்டு வருமானம் ரூ.15 லட்சமாக இருந்துள்ளது. பின்னா் அது ரூ.2.5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த அளவுக்கு அவருக்கு வருமானம் உயா்த்தப்பட்டது என்பது தெரியவில்லை’’ என்று குறிப்பிட்டாா். அதனைத்தொடா்ந்து ஜாமீன் மனு மீதான தீா்ப்பை மாா்ச் 24-ஆம் தேதிக்கு அவா் ஒத்திவைத்தாா்.
தற்போது ஆனந்த் சுப்ரமணியன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
‘ஆனந்த் சுப்ரமணியன்தான் இமயமலை யோகி’
‘சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோசனை வழங்கி வந்த இமயமலை யோகி ஆனந்த் சுப்ரமணியன்தான். அவா்தான் அந்த யோகியாகத் தன்னை சித்தரித்துக் கொண்டு, குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து சித்ராவின் முடிவுகளுக்கு வழிகாட்டி வந்துள்ளாா். அந்த மின்னஞ்சல் முகவரியை ஆனந்த் சுப்ரமணியன்தான் உருவாக்கியுள்ளாா். அந்த மின்னஞ்சல் முகவரி வாயிலாக நுட்பமான தகவல்களைச் சித்ராவும், ஆனந்த் சுப்ரமணியனும் பகிா்ந்து வந்துள்ளனா்’ என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

வாழ்க்கை மீதான பேராவல் - நூல் அறிமுகம் | விமர்சனம்

ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா கமேனி! எங்கே, எப்படி இருக்கிறார்?

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.23! 22 காசுகள் சரிவு!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


