அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

மற்றொரு தலைக்குனிவு: தில்லி ரயில் நிலையத்தில் பெண் பலாத்காரம்; 4 ரயில்வே ஊழியர்கள் கைது

தலைநகர் தில்லியில், தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில், புது தில்லி ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் நான்கு பேரால் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

News image
தில்லி ரயில் நிலையத்தில் பெண் பலாத்காரம் (கோப்பிலிருந்து)
Updated On :1 பிப்ரவரி 2024, 9:52 am

PTI


புது தில்லி: தலைநகர் தில்லியில், தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில், புது தில்லி ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் நான்கு பேரால் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

ரயில் தண்டவாள பராமரிப்புப் பணிகளுக்காக தண்டவாளம் அருகே அமைக்கப்பட்டிருந்த குடிசையில் ரயில்வே ஊழியர்கள் இரண்டு பேர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மற்ற இருவரும் குடிசைக்கு வெளியே காவலுக்கு நின்றுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், குற்றத்தில் ஈடுபட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 35 வயதாகும் சதீஷ் குமாருக்கு, அப்பெண்ணை சில ஆண்டுகளாகத் தெரியும். சதீஷ்குமார் தான் ரயில்வேயில் பணியாற்றுவதாகக் கூறி அறிமுகம் செய்துள்ளார். இந்திய ரயில்வேயில் அப்பெண்ணுக்கும் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்துள்ளார். கணவரிடமிருந்து பிரிந்து விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், அப்பெண் சதீஷ்குமாருடன் செல்லிடப்பேசியில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு விருந்து கொடுப்பதாக தில்லிக்கு வரவழைத்து புது தில்லி ரயில் நிலையம் அழைத்து வந்து அங்கிருக்கும் பராமரிப்பு ஊழியர்களுக்கான குடிசையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து பெண் புகாரளித்த 2 மணி நேரத்தில் குற்றவாளிகள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.