அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

முதல் முறையாக.. ஒரே நாளில் 10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட்ட சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்த 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

News image
ஒரே நாளில் 10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட்ட சிபிஎஸ்இ
Updated On :1 பிப்ரவரி 2024, 9:51 am

PTI


சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்த 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முதல் முறையாக, ஒரே நாளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

கரோனா பேரிடர் காரணமாக, 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை இரண்டு பருவத் தேர்வுகளாக நடத்தியிருந்தது  சிபிஎஸ்இ நிர்வாகம். இந்த நிலையில், இன்று காலை பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளையும் பிற்பகல் 2 மணியளவில் 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளையும் வெளியிட்டது.

மொத்தம் 100 மதிப்பெண் கொண்ட ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற மாணவர்கள் 33% மதிப்பெண் பெற வேண்டியது அவசியம். மாணவர்கள் தேர்வு முடிவுகளை cbse.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வழக்கம் போல மாணவர்களை விடவும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மாணவர்களில் 94.40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மாணவர்களில் 93.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே வேளையில் 95.21% மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மூன்றாம் பாலினத்தவர் 90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.