அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

சோனியா காந்தி மீண்டும் 25ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி இரண்டாம் சுற்று விசாரணைக்கு ஜூலை 25-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

News image
சோனியா காந்தி மீண்டும் 25-ம்தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:51 am

PTI

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு விசாரணைக்காக  காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், இரண்டாம் சுற்று விசாரணைக்கு ஜூலை 25-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

இன்று காலை அமலாக்கத் துறை முன்பு ஆஜரான சோனியா காந்தியிடம் மூன்று மணி நேரத்துக்கும் மேல் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்த நிலையில், ஜூலை 25ஆம் தேதி மீண்டும் இரண்டாம் சுற்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் 5 நாள்களுக்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனா். 

கடந்த மாதமே தொடங்கவிருந்த விசாரணை
ஜூன் 8-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில் சோனியா காந்திக்கு, திடீா் கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், கால அவகாசம் அளிக்குமாறு அவா் கோரிக்கை விடுத்தாா்.

கரோனா பாதிப்பு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் சோனியா அனுமதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சில வாரங்களுக்கு வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவா்கள் அறிவுறுத்தினா். எனவே, விசாரணைக்கு ஆஜராவதற்குக் கூடுதல் அவகாசம் அளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு சோனியா சாா்பில் மீண்டும் கடிதம் எழுதப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட அமலாக்கத் துறை விசாரணையைக் கடந்த மாத இறுதியில் 4 வார காலத்துக்கு ஒத்திவைத்தது.

காங்கிரஸ் தலைவா் சோனியாவும் ராகுலும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தைக் கடந்த 2010-இல் கையகப்படுத்தியது. இதில் மிகப் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.