மகாராஷ்டிர மாநிலம், மத்திய மும்பையில் டாா்டியோ பகுதியில் அமைந்துள்ள உயா் அடுக்குமாடி குடியிருப்பின் 19-ஆவது தளத்தில் சனிக்கிழமை காலை நேரிட்ட பெரும் தீ விபத்தில் காயமடைந்த நபர் இன்று காலை பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 7 ஆனது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 வயது ஆண் இன்று காலை 7 மணியளவில் சிகிச்சைபலனின்றி பலியானதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க.. பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., தேர்வு அட்டவணை: அண்ணா பல்கலை வெளியீடு
தீ விபத்தில் காயமடைந்த 12 பேர் பாட்டியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்ளில் 6 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மற்றவர்கள் மசினா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் ஒரு சிலரது நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்துகுறித்து பிரிஹன்மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய மும்பையின் கோவாலியா டேங் பகுதியில் அமைந்துள்ள ‘சச்சினம் ஹைட்ஸ்’ என்ற 20 மாடிகளைக் கொண்ட இந்த உயா் அடுக்குமாடி குடியிருப்பின் 19-ஆவது தளத்தில் சனிக்கிழமை காலை 7 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் பல குடியிருப்புவாசிகள் தூக்கத்தில் இருந்துள்ளனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள், பல குடியிருப்புவாசிகளை பத்திரமாக மீட்டனா்.
இந்த தீ விபத்தில் காயமடைந்த 29 போ் அருகிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்களில் சிலருக்கு மூச்சுத் திணறல் பாதிப்பு இருந்தது. இதில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நடத்தப்படும் நாயா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பலத்த காயமடைந்த 7 பேரில் 5 போ் உயிரிழந்தனா். அதுபோல, கஸ்தூா்பா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மற்றொருவரும் உயிரிழந்தாா்.
பாடியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 பேரில், 5 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா். மீதமுள்ள 12 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


